Search This Blog

Wednesday 1 February 2023

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடத்துதல் சார்ந்து முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளி மேலாண்மைகுழு கூட்டம் ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமை நடைபெற்று வந்தது 

பள்ளிகளில் தேர்வுகள் அந்த கிழமைகளில் வருவதால் இனி மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்ட வழிமுறைகளின் படி நடத்தப்பட வேண்டும் என மாநில திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார் 

1. பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் வருகைப்பதிவு 

தலைவர் மட்டுமே பெற்றோர் செயலியில் கூட்டம் நடைபெறும் பொது  செய்தல் வேண்டும் தலைமை ஆசிரியர் அதை உறுதி செய்தல் வேண்டும் 

2. பள்ளி மேம்பாட்டுத்திட்டம் 

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் தங்கள் பள்ளிக்குத்தேவையான பள்ளி மேம்பாட்டு திட்டத்தினை செயலி வாயிலாக பதிவு செய்திட வேண்டும் 

திட்டமிடுதலுக்கான கருப்பொருள்கள் 
அ . மாற்றுத்திறனாளி மாணவர்கள் சார்ந்த செயல்பாடு 
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேர்வு சலுகை பெறுவது தொடர்பாக பெற்றோர்கள் இடத்தில விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் 



2. நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி (NS-NOP) திட்டம் 
    
நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி (NS-NOP) திட்டம் இணைய தளம் பள்ளியின்  சார்ந்த 147 பொருட்கள் மற்றும் துணைப்பொருட்களை காண்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 
அனைத்து அரசுப்பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்திட வங்கிக்கணக்கை விரைந்து தொடங்க வேண்டும் 


3. பள்ளி செல்லா/ இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பணி 

இக்கணக்கெடுப்புப்பணியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளை கண்டறிய துணை புரிய வேண்டும் 



4. இல்லம் தேடிக்கல்வி - ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்களுக்கான வழிகாட்டுநெறிமுறைகள் 

தொடக்கநிலையில் குறைதீர் கற்பித்தல் குறித்தும் மாணவர்களின் கற்றல்நிலை குறித்து கலந்துரையாட வேண்டும் 


உயர் தொடக்கநிலை மையங்களில் அதிக கவனம் தேவைப்படும் குழந்தைகளின் விவரங்களை தன்னார்வலர் ஆசிரியரிடம் கேட்டறிந்து அவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும் 


தொடர்ச்சியாக மையத்திற்கு வராத மாணவர்கள் பெயர்களை ஆசிரியரிடம் பகிந்து கொண்டு அக்குழந்தைகளை தொடர்ச்சியாக வர ஆசிரியர் வழியே ஊக்கப்படுத்தவேண்டும் 

5. மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி ஆலோசனை 


போன்ற செயல்பாடுகளுடன் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டிய பார்வையாளர்களை பற்றியும் ஆணையிடப்பட்டுள்ளது 


மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் ஆணை பதிவிறக்கம் செய்யவும் 

👇👇















































No comments:

Post a Comment