Search This Blog

Friday, 21 January 2022

இல்லம் தேடி நூலகம்: ஆசிரியரின் அசத்தல் முயற்சி

 

👉 கொரோனா 

    பெருந்தொற்றின் 

    காரணமாக 

    அனைத்துப்பள்ளிகளும் 

    அடைப்பட்டுக்கிடக்கின்றன 


👉 குழந்தைகள் 

    இல்லா பள்ளிகள் 

    வெறிச்சோடிப்

    போய்க்கிடக்கின்றன 


👉  குழந்தைகளின் 

    கற்றல் இடைவெளியால் 

    அவர்களின் வாசிப்புத்திறன்  

    மிகவும்  பின்தங்கி 

    சென்றுள்ளது  

    மறுக்க முடியாத 

    உண்மை 


👉 தொடர்ந்து 

    குழந்தைகள் 

    இது போன்ற சூழலுக்குள் 

    இருக்கும் போது 

    கண்டிப்பாக அது 

    குழந்தைகளின் 

    கல்வித்தரத்தில் 

    பின் அடைவை 

    ஏற்படுத்தும் 


👉 இந்தக்குறையை 

    நிவர்த்தி  செய்யும் 

    வண்ணம் 

    பெத்தநாயக்கனூர் 

    அரசு உயர்நிலைப்பள்ளி 

    தமிழ் ஆசிரியர் 

    திரு. ந.பாலமுருகன் 

    ஒரு புது முயற்சியை 

    கையில் எடுத்துள்ளார் 

    அதுவே 

    "இல்லம் தேடி நூலகம்"


👉 பள்ளி நூலகத்தில் 

    உள்ள 

    அறிஞர்களின் கதைகள், 

    விஞ்ஞானிகளின் கதைகள், 

    நீதிக்கதைகள், 

    சிறுவர்கள் விரும்பி 

    படிக்கும் கதைகள் 

    போன்ற வகையிலான 

    புத்தகங்களை குழந்தைகளிடம் 

    நேரில் சென்று கொடுத்து 

    அவர்களை 

    புத்தகம் வாசிப்பில் 

    உற்சாகம் படுத்திவருகிறார் 


👉 ஆசிரியரே 

    நேரில் வந்து 

    தங்களுக்கு தேவையான 

    புத்தகங்களை தருவதால் 

    மாணவர்கள்  தினமும் 

    ஒரு புத்தகத்தை 

    படித்து முடித்து 

    மறுநாள் ஆசிரியரிடம் 

    புதிய புத்தகங்களை  

    பெற்றுக்கொள்கிறார்கள் 


👉 தான் கொண்டு 

    செல்லும் புத்தகங்களில் 

    தேவையானவற்றை 

    மாணவர்களையே 

    தேர்ந்தெடுக்கச்சொல்லி 

    அவர்கள் விரும்பிய 

    புத்தகத்தையே கொடுக்கிறார் 


👉 நேரில் செல்வதால்  

    மாணவர்களின் 

    குடும்பச்சூழலையும் 

    அறிந்துக்கொள்ள 

    முடிகிறது எனக்கூறுகிறார் 


👉 கொரோனா விதிமுறைகளைப்

    பின்பற்றி மிகவும் கவனமுடன் 

    தானும் மாஸ்க் அணிந்து 

    மாணவர்களையும் 

    மாஸ்க் அணிய கூறி 

    அருகில் செல்கிறார் 


👉 மாணவர்களின் கல்வி 

    எந்த சூழலிலும் 

    இடை நின்று விடக்கூடாது 

    என நினைக்கும் ஆசிரியர் 

    திரு. ந.பாலமுருகன் 

    அவர்களுக்கு வாழ்த்துக்கள் 











இப்படி தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிப்பு அடையக்கூடாது என பல ஆசிரியர்கள் இந்த LOCKDOWN நேரத்தில் பாடுபட்டு வருகிறார்கள்.

நீங்களோ, உங்கள் உடன் பணிபுரியும் சக ஆசிரியரோ, உங்களுக்கு தெரிந்த ஆசிரியரோ இது போல் வித்தியாசமாக செயல்பட்டுக்கொண்டு உள்ளார் எனில் அவரைப்பற்றி முழுத்தகவலை 9952329008 என்ற நம்பருக்கு போட்டோ உடன் வாட்ஸ் அப் செய்யுங்கள் 

உடனடியாக அவரை வெளி உலகிற்க்கு அடையாளம் காட்டுகிறோம் 


"நல்லதை ஊர் அறியச்செய்வோம்"

"அறிந்தவர்களை நல்லது செய்ய வைப்போம்"






No comments:

Post a Comment