Search This Blog

Tuesday, 30 June 2026

மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்குதல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 


மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்குதல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு




பள்ளி மாணவிகள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் எந்தவொரு சூழலையும் தைரியமாகவும் நிதானமாகவும் பக்குவமாகவும் எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் திறனைப் பெற்றிருக்க வேண்டியது மிக அவசியம். 




இதனைக் கருத்தில் கொண்டு மாணவியரின் உடல் வலிமையையும், மன உறுதியையும் மேம்படுத்தவும், ஆபத்தான நேரங்களில் தற்காத்துக் கொள்ளவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கராத்தே, ஜுடோ, டேக்வேண்டோ, சிலம்பம் போன்ற தற்காப்புக்கலைப் பயிற்சிகளை பள்ளி அளவில் மாணவிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 





இப்பயிற்சிகள், மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், அவர்களது பாதுகாப்புக்கு உறுதுணையாகவும் அச்சமின்றி சமூகத்தில் முன்னேறவும் வழிவகுக்கிறது.





அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கும் 3 மாதங்கள் தற்காப்புகலைப் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.





தற்காப்புக்கலை பயிற்சியளிக்க ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று மாதங்களுக்கு ரூ.12,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.





 மாவட்டங்களில் தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் நிதி ஒதுக்கீட்டு விவரம் இணைப்பு 1-இல் கொடுக்கப்பட்டுள்ளது. 





இப்பயிற்சிக்குரிய நிதி மாவட்ட வாரியாக விடுவிக்கப்பட்டுள்ளது.




மாவட்ட திட்ட அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டியவை:



1. மாநில திட்ட இயக்ககத்திலிருந்து செயல்முறைகள் பெறப்பட்டவுடன், சார்ந்த பள்ளிகளுக்கு உரிய முறையில், பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்த தெளிவான வழிகாட்டுதல் அடங்கிய முதன்மைக் கல்வி அலுவலரின் தனிசெயல்முறைகள் (Proceedings) உடனடியாக வட்டார வளமையம் வழியாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.




2. அரசு நடுநிலைப்பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட வேண்டும். ஒரு பள்ளியில் அதிகபட்சம் 100 மாணவியர்களுக்கு மிகாமலும் குறைந்தப்பட்சம் 10 மாணவியர்களுக்கு குறையாமலும் தற்காப்பு கலைப்பயிற்சி வழங்கப்படுதல் வேண்டும். தற்காப்பு கலைப் பயிற்சி வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் விவரம் EMIS இணைய தளத்தில் உள்ள தரவுகளின் அடிப்படையில் வட்டார வாரியாக கணக்கிடப்படவேண்டும்.






3. உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்கள் 200-க்குள் இருக்கும் பட்சத்தில் 100 மாணவியர்களுக்கு மிகாமல் தற்காப்பு கலைப்பயிற்சி கற்றுத்தரப்பட வேண்டும். 100 மாணவியர்களுக்கு குறைவாக இருக்கும் பள்ளிகளில் அப்பள்ளிகளிலுள்ள மாணவியர்கள் அனைவருக்கும் தற்காப்புகலைப் பயிற்சி வழங்கப்படுதல் வேண்டும்.




4. வட்டார வாரியாக பள்ளிகளின் எண்ணிக்கைகேற்ப நிதி கணக்கிடப்பட்டு வட்டார வளமையத்திற்கு விடுவிக்கப்பட வேண்டும். ஒரு பள்ளிக்கு ரூ.12,000/- என்ற விதத்தில் கணக்கிடப்பட வேண்டும். தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் விவரம் வட்டார வளமையத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.




5. பயிற்றுநருக்கான மாத மதிப்பூதியம் ரூ.4000/- வழங்கப்படவேண்டும்.





6. அந்தந்த பள்ளிகளுக்கு தேவையான தற்காப்புக்கலை மற்றும் பயிற்றுநரை சார்ந்த பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தேர்வு செய்தல் வேண்டும். மாவட்ட அளவிலோ, வட்டார அளவிலோ தேர்வு செய்தல் கூடாது. பயிற்றுநரால் காவல் நிலையத்திலிருந்து குற்றமின்மை அறிக்கை பெறப்பட்டு பள்ளியில் சமர்பிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.





7. பள்ளிகளில் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலிருந்து தற்காப்புக் கலைப் பயிற்சி தொடங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 1 1/2 மணிநேரம் வீதம் வாரத்திற்கு 2 நாள்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதையும் உறுதி செய்ய வேண்டும்.





8. தற்காப்பு கலைப் பயிற்சி நடைபெறும் அனைத்து பள்ளிகளிலும் EMIS தளத்தில் தற்காப்பு கலைப் பயிற்சி சார்ந்து பயிற்றுநர் விவரம், பயிற்சி வகுப்புகளின் விவரங்களை உரிய நேரத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.





9. தற்காப்புகலைப் பயிற்சி பள்ளியில் தொடங்கப்பட்டு முதல் 8 பயிற்சி வகுப்புகள் (12 மணி நேரம்) முடிவடைந்த பின்னரே பயிற்றுநருக்குரிய அம்மாத மதிப்பூதியம் ரூ.4000/- வட்டார வளமையத்திலிருந்து பள்ளிக்கு விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.




10. மாவட்டத் திட்ட அலுவலகத்தில் பள்ளிகளில் பயிற்சி வழங்கப்படும் தற்காப்புக்கலை விவரம், பயிற்றுநர் விவரம், பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு விவரம் ஆகியவற்றிற்கு முறையான பதிவேடுகள் பராமரிக்கப்படுதல் வேண்டும்.





11. பள்ளிகளில் நவம்பர் மாதத்திற்குள் தற்காப்புகலைப் பயிற்சி நடத்தி முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 





12. முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், உதவித்திட்ட அலுவலர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டாரக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கள ஆய்வு அலுவலர்கள் அனைவரும் பள்ளிகளில் தற்காப்புகலைப் பயிற்சி நடைபெறுவதை பார்வையிட்டு உறுதி செய்தல் வேண்டும்.




வட்டார வளமைய அளவில் மேற்கொள்ளப்பட வழிமுறைகள்:




1. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்து பெறப்பட்ட செயல்முறையினை உரிய பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்.



2. தற்காப்புகலைப் பயிற்சிக்கான முக்கியத்துவம் மற்றும் இப்பயிற்சி பள்ளிகளில் செவ்வனே நடைபெறுவதற்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை குறித்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கூட்டம் நடத்தி விரிவாக கூற வேண்டும்.




3. பள்ளிகளில் ஜூலை மாதத்திற்குள் பயிற்றுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.




4. பள்ளிகளில் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலிருந்து தற்காப்புக் கலைப் பயிற்சி தொடங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.




5. மொத்தமுள்ள 24 பயிற்சி வகுப்புகளும் மூன்றாக பிரிக்கப்பட்டு (ஒரு மாதத்திற்கு 8 பயிற்சி வகுப்புகள் வீதம்) மாதந்தோறும் உரிய பள்ளிகளுக்கு ரூ.4000/- வட்டார வளமையத்திலிருந்து பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட வேண்டும்.




6. மாவட்டத்திலிருந்து நிதி பெறப்பட்டவுடன் வட்டார வளமையத்திலிருந்து பள்ளிக்கு உடனடியாக நிதி விடுவிக்கப்படக் கூடாது.




7. தற்காப்புகலைப் பயிற்சி பள்ளியில் தொடங்கப்பட்டு ஒவ்வொரு 8 பயிற்சி வகுப்புகள் முடிந்ததும் பள்ளி தலைமையாசிரியர் வட்டார வளமையத்திற்கு அதற்குரிய தொகையினை உரிய விவரங்களுடன் கோருவதற்கு தெரியப்படுத்த வேண்டும். வட்டார வளமையத்தில் தற்காப்புகலைப் பயிற்சி கூறுக்கான (component) ஆசிரியர் பயிற்றுநர் பள்ளிகள் பயிற்சி வகுப்புகளுக்குரிய விவரங்களை EMIS-யியில் பதிவு செய்யப்பட்டிருப்பதை BRC login-யில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்படத்திலுள்ள தேதியின் அடிப்படையில் சரிபார்க்கப்பட வேண்டும்.





8. பயிற்சி வகுப்புகள் முடிவடைந்துள்ளதை உறுதி செய்த பின்னரே அம்மாதத்திற்குரிய நிதியான ரூ.4000/-யினை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அப்பள்ளிக்கு விடுவிக்க வேண்டும். இந்நடைமுறை ஒவ்வொரு மாதமும் பின்பற்றப்பட வேண்டும்.




9. பள்ளிகளில் தற்காப்பு கலைப் பயிற்சி நடைபெறும் பொழுது வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) மற்றும் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும் பள்ளிகளை பார்வையிட்டு உரிய வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 10. வட்டார வளமையத்திற்குட்பட்ட அனைத்து அரசு நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் நவம்பர் மாதத்திற்குள் தற்காப்பு கலைப் பயிற்சி சிறப்பாக நடத்தி முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.



தற்காப்புக்கலை பயிற்சிகளை பள்ளி அளவில் செயல்படுத்துவதற்கான நெறிமுறைகள்:



1. கராத்தே, ஜுடோ, டேக்வேண்டோ, சிலம்பம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தற்காப்புகலையினை தேர்வு செய்து வாரத்தில் ஏதேனும் இரண்டு நாட்களில், மாணவியர்களுக்கு இணைப்பில் கண்டுள்ள பாடதிட்டத்தை மூன்று மாதங்களுக்கு பயிற்சி தருதல் வேண்டும். மொத்தம் 24 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பயிற்சி வகுப்புகளும் 1 1/2 மணி நேரம் நடைபெற வேண்டும்.





2. அரசு நடுநிலைப்பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு பள்ளி வளாகத்தில் தற்காப்பு கலைப் பயிற்சி கற்றுத்தரப்பட வேண்டும். ஒரு பள்ளியில் அதிகபட்சம் 100 மாணவியர்களுக்கு மிகாமலும் குறைந்தப்பட்சம் 10 மாணவியர்களுக்கு குறையாமலும் தற்காப்பு கலைப் பயிற்சி வழங்கப்படுதல் வேண்டும்.





3. உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்கள் 200-க்குள் இருக்கும் பட்சத்தில் 100 மாணவியர்களுக்கு மிகாமல் தற்காப்பு கலைப்பயிற்சி கற்றுத்தரப்பட வேண்டும். 100 மாணவியர்களுக்கு குறைவாக இருக்கும் பள்ளிகளில் அப்பள்ளிகளிலுள்ள மாணவியர்கள் அனைவருக்கும் தற்காப்பு கலைப் பயிற்சி வழங்கப்படுதல் வேண்டும்.





4. எக்காரணத்தை முன்னிட்டும் ஒரு பள்ளியில் பயிலும் மாணவியர்களைப் பயிற்சிக்காக வேறு ஒரு பள்ளிக்கு அழைத்துச் செல்லுதல் கூடாது.





5. மாணவிகளின் உடற்தகுதி மிகவும் முக்கியமானது. அதன் அடிப்படையிலேயே மாணவிகளை தற்காப்புகலைப் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.





6. மாணவிகள் மற்றும் பெற்றோரின் சம்மதம் பெற்ற பின்னரே மாணவிகளுக்கு தற்காப்பு கலைப் பயிற்சி அளிக்க வேண்டும்.





7. மாணவியர் விடுதியில் தங்கி பயிலும் மாணவியர்களுக்கு தற்காப்பு கலைப் பயிற்சி அளிப்பதில் முன்னுரிமை வழங்குதல் வேண்டும்.





8. SMC, Alumini Sponsors-களிடம் தற்காப்பு கலைப் பயிற்சிக்கு தேவைப்படும் உபகரணங்களை (Materials) வாங்கலாம்.




9. மாணவிகள் அன்றாடம் பயன்படுத்தும் ஆடை மற்றும் பிற பொருட்களைக் (KEY CHAIN, DUPPATTA, STOLE, MUFFLERS, BAGS, PEN, PENCIL, NOTE BOOKS, ETC.) ஆபத்து காலங்களில் தங்களை தற்காத்துக் கொள்ளும் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும். 





10. பெண் பயிற்றுநர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பெண் பயிற்றுநர் இல்லாத நிலையில் மட்டுமே ஆண் பயிற்றுநரை தேர்ந்தெடுக்கலாம். 





11. பயிற்றுநரை தேர்ந்தெடுப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பயிற்றுநரை தேர்ந்தெடுக்க வேண்டும். பயிற்றுநரை காவல் நிலையத்திலிருந்து குற்றமின்மை அறிக்கை பெற்று சமர்பிக்க தெரிவிக்க வேண்டும். பயிற்றுநரால் சமர்பிக்கப்படும் குற்றமின்மை அறிக்கையினை பள்ளியில் கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும். அவ்வாறு சமர்பிக்காத பயிற்றுநரை பள்ளியில் பயிற்சியளிக்க அனுமதிக்கக் கூடாது. 





12. பள்ளிகளில் தகுதியான பயிற்றுநரை ஜுலை மாதத்திற்குள் கண்டறிய வேண்டும். 





13. பள்ளியில் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறும் பொழுது பெண் ஆசிரியர் ஒருவர் மேற்பார்வையில் தான் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். 





14. பயிற்றுநர், பயிற்சியில் பங்குபெறும் மாணவிகள் மற்றும் மேற்பார்வை செய்யும் ஆசிரியர் ஆகியோருக்கு கட்டாயம் வருகை பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். 





15. அந்தந்த தற்காப்புக் கலைக்குரிய முன்னேற்பாடுகளுடன் மட்டுமே பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். பங்குபெறும் மாணவிகளின் பாதுகாப்பிற்கு உரிய கவனம் செலுத்துதல் வேண்டும். மாணவிகளின் திறனுக்கேற்ப பயிற்சி வழங்கப்பட வேண்டும். 





16. சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் கலந்துபேசி நேர அட்டவணையை இறுதி செய்திட வேண்டும். 





17. பள்ளியில் SMC தீர்மானம் மற்றும் Skill Map - இன் படி, பயிற்சிக்கு பயிற்றுநர் நியமிக்கப்பட்டு, பயிற்சியானது திட்டமிட்டபடி நடைபெறுதலை உறுதி செய்யவேண்டும். 





18. SMC குழு உறுப்பினர்கள் மாதம் இரு முறையேனும் தற்காப்பு கலைப் பயிற்சியை பார்வையிடவேண்டும். 






19. பயிற்சி நடைபெறுவதை சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் சார்ந்த அலுவலர்கள் அனைவரும் பார்வையிடுதல் வேண்டும். 






20. பயிற்சி சீரிய முறையில் நடக்க அந்தந்தப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் உறுதுணையாய் இருக்க வேண்டும். 






21. EMIS இணையதளத்தில் தற்காப்புகலைப் பயிற்சி சார்ந்து பயிற்றுநர்கள் விவரம் மற்றும் ஒவ்வொரு பயிற்சி வகுப்பின் புகைப்படம், பயிற்சி மேற்கொள்ளும் மாணவியர்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பயிற்சி நடைபெறும் பொழுது பள்ளி இருப்பிடத் தகவல் (GEO TAG) மற்றும் தேதி (TIME STAMP) ஆகிய விவரங்கள் பதிவாகும் வகையில் புகைப்படம் எடுக்கப்பட வேண்டும். அப்புகைப்படத்தினை மட்டுமே ஒவ்வொரு பயிற்சி வகுப்பிற்கும் EMIS-யில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 





22. தற்காப்பு கலைப் பயிற்சி நடைபெறும் பொழுது முதலுதவிபெட்டி (FIRST AID KIT) தயாராக வைத்திருக்க வேண்டும். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் (PET)/பொறுப்பு ஆசிரியர் இதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும். 





23. பயிற்றுநருக்கு தற்காப்பு கலைப் பயிற்சி நடத்துவது குறித்து கூறப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் தெரியப்படுத்த வேண்டும். 





24. ஒவ்வொரு மாதமும் அம்மாதத்திற்குரிய 8 பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்ததும் வட்டார வளமையத்தில் உரிய விவரங்களுடன் சமர்பிக்க வேண்டும். EMIS-யில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய தொகையினை பள்ளிக்கு விடுவிக்கப்படும். 





25. மாதந்தோறும் மதிப்பூதிய தொகை ரூ.4000/- SMC மூலமாக பயிற்றுநரின் வங்கி கணக்கிற்கு பள்ளியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.




தற்காப்பு கலைப்பயிற்சி பயிற்றுநர்களை தேர்ந்தெடுக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்: 




கராத்தே பயிற்றுநர்களுக்கான கல்வித் தகுதி: 

குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 



தொழில் நுட்பக் கல்வித் தகுதிகள்:


1. Karate/Judo/Taekwondo - (Certificate Course)


2. Karate/Judo/Taekwondo - (Diploma Course)


3. ஆண்டு முதுநிலை பட்டயப்படிப்பு (P.G. in Diploma)



4. World Karate Federation அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.



5. Don 4th degree in Karate (Black Belt). 

பயிற்றுநர் மீது குற்றமின்மை அறிக்கை (police verification report) காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும்.




பொது வழிமுறைகள்:


பயிற்றுநர் சார்ந்து எவ்வித பணி நியமன ஆணையையும் முதன்மைக் கல்வி அலுவலரோ, இதர ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலர்களோ அல்லது பள்ளித் தலைமை ஆசிரியரோ வழங்கக்கூடாது.



பயிற்றுநரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியான பயிற்றுநர்கள் மட்டுமே பள்ளிகளில் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்தல் வேண்டும். 



மாவட்டங்களில் பயிற்றுநர்கள் போதுமான அளவில் இருப்பின் ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனி பயிற்றுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஒரே பயிற்றுநர் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் பயிற்சியை நடத்தலாம். 



பயிற்றுநர்களுக்கு எவ்வித பணி அனுபவச் சான்றிதழும் வழங்கக் கூடாது.




மேற்குறிப்பிட்டுள்ளவாறு, அனைத்து அரசு நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் நடைபெறும், பெண் குழந்தைகளுக்கான தற்காப்புக்கலைப் பயிற்சியினை, சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தொடங்கி, வாரத்திற்கு இரு வகுப்புகள் விதம் (ஒவ்வொரு வகுப்பும் 1 1/2 மணிநேரம்) மூன்று மாதங்களுக்கு மொத்தம் 24 பயிற்சி வகுப்புகள் (36 மணி நேரம்) சிறப்பான முறையில் நடத்த தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





குறிப்பாக இப்பயிற்சியினை எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வண்ணம் நடத்திட முதன்மைக்கல்வி அலுவலர்கள் செயல்திட்டம் தீட்டி செயல்படுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்ற வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது 





மேலும் இந்த வழிகாட்டுமுறை குறித்த PDF தேவையெனில் கீழ்கண்ட லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

தொடக்கக் கல்வித் துறை அனைத்து பதவிகளிலும் பொது மாறுதலுக்கு விண்qணப்பித்துள்ள மாநில அளவில் முன்னுரிமை பட்டியல்

 

தொடக்கக் கல்வித் துறை 

அனைத்து பதவிகளிலும் பொது மாறுதலுக்கு விண்qணப்பித்துள்ள மாநில அளவில் முன்னுரிமை பட்டியல்


உங்கள் பெயர் மற்றும் உங்களின் முன்னுரிமை சரியாக உள்ளதா என சரிபார்த்து கொள்ளவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD EXCEL SHEET

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 44 - VII ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு கணக்கு






இன்று இரு தேர்வுகள்  7 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு கணக்கு வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  





மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 





ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 





இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 





இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 




தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)




தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 




தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 





இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 





இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 





இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 






இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 





மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 





ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 





அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 





இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 





இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 




இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 



வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN



இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 



தேர்வுக்கான பாடப்பகுதி 


7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. ஒளியியல் 

2. அண்டம் மற்றும் விண்வெளி 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM





8 ஆம் வகுப்பு 

கணக்கு 

எண்கள் ( விகிதமுறு எண்கள்)

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM




மாணவர்களின் கவனத்திற்கு 


மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 


STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 


STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 


STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 


STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 



STEP 5

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம் 





நாளை  மாலை 7 மணி தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 


7 ஆம் வகுப்பு 

சமூக அறிவியல் 

1. விஜய நகர பாமினி பேரரசுகள் 

2. முகலாயப் பேரரசு  




கணக்கு 


 வகுப்பு-8   

பாடம்-எண்கள்

(வர்க்கம் கனம், வர்க்க & கனமூலங்கள்) 



 

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416


த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040



உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 



அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 


Monday, 29 June 2026

NMMS EXAM தேர்வுக்கு வழிகாட்டும் மாதிரி ஆன்லைன் தேர்வு 43 - VII சமூக அறிவியல்

 

 





இன்று ஒரு தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வழங்கப்படுகிறது. தேர்வுக்கான லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது  





மதிப்புமிகு ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பான மாணவ செல்வங்களுக்கும் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 





ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு நடைபெற்று வருகிறது 





இந்த தேர்வில் வெற்றி பெரும் மானவர்கள் மாதம் ரூபாய் 1000 வீதம் 4 வருடங்களுக்கு ரூபாய் 48000 பெறுவார்கள் 





இந்த தேர்வுக்கான வினாக்கள் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் 




தாள் 1 MAT (MENTAL ABILITY TEST)

தாள் 2 SAT (SCHOLASTIC APTITUDE TEST)




தாள் 1 தேர்வானது மாணவர்களின் மனத்திறனை சோதிக்கும் வகையில் 90 வினாக்கள் கேட்கப்படும் 




தாள் 2 தேர்வானது 7 மற்றும் 8 வகுப்பு பாடங்களான கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 90 வினாக்கள் கேட்கப்படும் 





இரண்டு தேர்வும் சேர்ந்து மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் 





இதில் தேர்வு பெரும் மாணவர்கள்  மதிப்பெண் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் 





இந்த தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நமது    ramanibabu.blogspot.com   சார்பில் வழங்கப்பட்டு வருகிறது 






இந்த மாதிரி தேர்வானது தினமும் மாலை 7 மணி அளவில் நடைபெறும் 





மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அதற்கான மதிப்பெண்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் 





ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேர்வுக்கான பாடப்பகுதி  முந்தைய நாளில் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் நடத்தப்படும் 





அந்த பாடப்பகுதிக்கு ஏற்றாற்போல்  மாணவர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இந்த தேர்வுகளை எழுதலாம் 





இந்த தேர்வுகளுக்காக எந்த ஒரு கட்டணமும் கிடையாது 





இது 100 சதவீதம் மாணவர்களின் நலன் சேர்ந்து நடத்தப்படுகிறது 




இதற்காக நாங்கள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுவில் இணைந்த கொண்டு தினமும் தேர்வுக்கான லிங்கை பெறலாம்  பெரும்பாலான தேர்வுக்கு தொடர்பான விளக்கங்கள் ஆன்லைன் வகுப்புகள், மாதிரி தேர்வுகள் பாடக்குறிப்புகள் வாட்ஸ் அப் சானல் வழியாகவே அனுப்பப்படும் எனவே மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணைந்து கொள்ளவும் 



வாட்ஸ் அப் சானல் லிங்க் 

👇

CLICK HERE TO JOIN



இன்று தேர்வுக்கான பாடப்பகுதி மற்றும் தேர்வுக்கான லிங்க் 



தேர்வுக்கான பாடப்பகுதி 


7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 


1. மக்கள் தொகையும் குடியிருப்புகளும் 

2. சமத்துவம் 

3. அரசியல் கட்சிகள் 

4. உற்பத்தி 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM




மாணவர்களின் கவனத்திற்கு 


மேற்கண்ட அனைத்து தேர்வுகளையும் நீங்கள் ஆங்கில வழியில் எழுதும் வழிமுறைகள் 


STEP 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM என்பதை CLICK செய்தவுடன் உங்களுக்கு தேர்வுக்கான GOOGLE FORM வினாத்தாள் OPEN ஆகும் 


STEP 2

வலது ஓரத்தில் மேலே தெரியும் மூன்று புள்ளிகளை CLICK செய்யவும் 


STEP 3

அதில் தோன்றும் மெனுவில் கீழே TRANSLATE என வரும் அதனை கிளிக் செய்யவும் 


STEP 4

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும். அவ்வாறு தெரியவில்லை எனில் அதில் தெரியும் மொழியில் ENGLISH என்பதை தேர்வு செய்யவும் 



STEP 5

இப்போது உங்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் தெரியும் நீங்கள் தேர்வு எழுதலாம் 





நாளை  மாலை 7 மணி தேர்வுகளுக்கான பாடப்பகுதிகள் 


7 ஆம் வகுப்பு அறிவியல் 

1. ஒளியியல் 

2. அண்டம் மற்றும் விண்வெளி 




நாளை முதல் 8 ஆம் வகுப்பு கணக்கு ஆன்லைன் தேர்வு தொடக்கம் 


தேர்வுக்கான பாடப்பகுதி 


எண்கள் ( விகிதமுறு எண்கள்- வகுப்பு-8 )






நாளை மறுபடியும் 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் REVISION செய்யப்படுகிறது ஆனால் இந்த முறை சில பாடங்கள் சேர்ந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இவ்வாறு பாடங்கள் சேர்ந்து நடத்தும் தேர்வினை எழுதி பயிற்சி பெற வேண்டும் 



 



மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) 

9952329008

9361564416


த. நெல்சன் 

பட்டதாரி ஆசிரியர் (கணக்கு)

9500870040



உங்கள் மாணவர்கள் உங்கள் நண்பர்களுக்கும்  இதை அனுப்பி அவர்களையும் குழுவில் இணைந்து தேர்வு எழுதி வெற்றி பெற உதவி செய்யுங்கள் 



அன்புடன் 

இள.பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி ஒன்றியம் 

தென்காசி மாவட்டம் 


ROOT ONLINE TEST FOR TET PAPER II - VIII SOCIAL SCIENCE TEST 10

 

  



ROOT ONLINE TEST FOR TET PAPER II 

VIII SOCIAL SCIENCE TEST 10


பாடம் 


8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. வானிலை மற்றும் காலநிலை 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM


ROOT ONLINE TEST FOR TET PAPER II - VIII SOCIAL SCIENCE TEST 9

  



ROOT ONLINE TEST FOR TET PAPER II 

VIII SOCIAL SCIENCE TEST 9


பாடம் 


8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. நீரியல் சுழற்சி 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM


ROOT ONLINE TEST FOR TET PAPER II - VIII SOCIAL SCIENCE TEST 8

 



ROOT ONLINE TEST FOR TET PAPER II 

VIII SOCIAL SCIENCE TEST 8


பாடம் 


8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

பாறை மற்றும் மண் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM


ROOT ONLINE TEST FOR TET PAPER II - VIII SOCIAL SCIENCE TEST 7



ROOT ONLINE TEST FOR TET PAPER II 

VIII SOCIAL SCIENCE TEST 7


பாடம் 


8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. இந்தியாவில் தொழிலகங்கள் வளர்ச்சி 

2. இந்தியாவில் ஆங்கில ஆட்சியில் நகர்ப்புற மாற்றம் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM


ROOT ONLINE TEST FOR TET PAPER II - VIII SOCIAL SCIENCE TEST 6




ROOT ONLINE TEST FOR TET PAPER II 

VIII SOCIAL SCIENCE TEST 6


பாடம் 


8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM




ROOT ONLINE TEST FOR TET PAPER II - VIII SOCIAL SCIENCE TEST 5

 



ROOT ONLINE TEST FOR TET PAPER II 

VIII SOCIAL SCIENCE TEST 5


பாடம் 


8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

மக்களின் புரட்சி 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM



ROOT ONLINE TEST FOR TET PAPER II - VIII SOCIAL SCIENCE TEST 4




ROOT ONLINE TEST FOR TET PAPER II 

VIII SOCIAL SCIENCE TEST 4


பாடம் 



8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM


ROOT ONLINE TEST FOR TET PAPER II - VIII SOCIAL SCIENCE TEST 3

 



ROOT ONLINE TEST FOR TET PAPER II 

VIII SOCIAL SCIENCE TEST 3


பாடம் 


8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 

(ஆங்கிலேய மராத்தியர் போர்கள் வரை) 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

ROOT ONLINE TEST FOR TET PAPER II - VIII SOCIAL SCIENCE TEST 2




ROOT ONLINE TEST FOR TET PAPER II 

VIII SOCIAL SCIENCE TEST 2


பாடம் 


8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை 

(ஆங்கிலேய மைசூர் போர் வரை) 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

ROOT ONLINE TEST FOR TET PAPER II - VIII SOCIAL SCIENCE TEST 1

 



ROOT ONLINE TEST FOR TET PAPER II 

VIII SOCIAL SCIENCE TEST 1


பாடம் 


8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

ஐரோப்பியர்களின் வருகை 

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM

Sunday, 28 June 2026

தினசரி காலை உணவு வழங்கும் பட்டியல் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட மதிய உணவுப் பட்டியல் அட்டவணை



தினசரி காலை உணவு வழங்கும் பட்டியல் மற்றும் 
திருத்தியமைக்கப்பட்ட மதிய உணவுப் பட்டியல் அட்டவணை