
9 ஆம் வகுப்பு மாணவர்கள் உதவி தொகை பெறுவதற்காக எழுதும் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி அறிவிப்பு
தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு தேர்வு இயக்ககத்தால் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு 1991-1992 முதல் நடத்தப்பட்டு வருகிறது
2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு 21.11.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது
தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வில் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு (ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவிகள்) ஆண்டிற்கு ரூ.1000/- வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்
2026-2027 கல்வியாண்டில் தமிழ்நாட்டிலுள்ள (சென்னை தவிர்த்து) ஊரகப் பகுதியில் கிராம பஞ்சாயத்து மற்றும் TOWNSHIP பகுதிகளிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது
மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.10/- செலுத்தி 07.10.2026 (பிற்பகல்) முதல் 13.10.2026 வரை விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது
என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
👇