NMMS தேர்வுக்கான நுழைவுசீட்டு வெளியீடு
NMMS தேர்வுக்கான நுழைவுசீட்டு வெளியீடு/பதிவிறக்கம் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்கள்
2025 - 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 10.01.2026 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது
இத்தேர்விற்கு வருகை புரியும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலுடன் கூடிய வருகைத் தாட்கள் தேர்வு மையம் வாரியாக இணையதளத்தில் 05.01.2026 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
ஒவ்வொரு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தவறாமல் பெயர் பட்டியலினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை 05.01.2026 பிற்பகல் முதல் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கீழ்கண்ட லிங்க் மூலம் சென்று அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் இருந்து தங்கள் பள்ளிக்கான USER ID/PASSWORD கொண்டு பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கவும், தேர்வு மைய விவரத்தினை மாணவர்களுக்கு தெரிவிக்கவும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது
தேர்வு எழுதும் மாணவர்களின் நுழைவுச் சீட்டுகளில் பெயர் பிறந்த தேதி வகுப்பினம் ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின் திருத்தத்தினை சிவப்பு நிற மையினால் சுழித்து சரியான பதிவினை குறிப்பிட்டு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பம் இட அறிவுரை கூறப்பட்டுள்ளது
புகைப்படம் மாறி இருந்தால் தேர்வுக்கூட நுழைவுசீட்டில் தேர்வு எழுதும் மாணவரின் சரியான புகைப்படத்தினை ஒட்டி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பம் இடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது
மற்றொரு புகைப்படத்தினை பெயர்ப்பட்டியலில் ஓட்டுவதற்காக தேர்வு மையக்கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். எனவே மாணவர்கள் புகைப்படம் மாறி இருந்தால் ஒரு புகைப்படத்தை நுழைவு சீட்டில் ஒட்டி தலைமை ஆசிரியர் கையொப்பம் இடப்பட வேண்டும் மற்றொரு புகைப்படத்தை தேர்வு எழுதும் மையம் எடுத்து வந்து கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்
தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள் இத்தகைய தேர்வரின் தேர்வுக்கூட நுழைவு சீட்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை பெயர்பட்டியலிலும் தவறாது மேற்கொள்ள வேண்டும் எனவும் தகவல் வழங்கப்பட்டுள்ளது
நுழைவுசீட்டு பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் (05.01.2026 பிற்பகல்)
👇
CLICK HERE👇
NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும்
👇