Search This Blog

Showing posts with label வாக்காளர் பட்டியலில் பெயர் இணைப்பு. Show all posts
Showing posts with label வாக்காளர் பட்டியலில் பெயர் இணைப்பு. Show all posts

Saturday, 20 December 2025

வாக்காளர் பட்டியலில் எவ்வாறு நம் பெயரையோ நமது குடும்பத்தினர் பெயரையோ சேர்க்கவேண்டும் எளிய விளக்கம் மற்றும் மாதிரி படிவங்கள்

வாக்காளர் பட்டியலில் எவ்வாறு நம் பெயரையோ நமது குடும்பத்தினர் பெயரையோ சேர்க்கவேண்டும் எளிய விளக்கம் மற்றும் மாதிரி படிவங்கள்  



👉வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க/நீக்க/திருத்தம் மேற்கொள்ள/மாறுதல் செய்ய சிறப்பு முகாம்கள்


27.12.2025 சனி

28.12.2015 ஞாயிறு

03.01.2026 சனி

04.01.2026 ஞாயிறு

இடம்: அந்தந்த வாக்குச்சாவடி




👉 வாக்காளர் பட்டியலில் நமது பெயரை சேர்ப்பதற்கு படிவம் 6-ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் 





👉 தற்போது வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம் நான்கு முறை நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் கலந்து கொண்டு நாம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அளிக்க வேண்டும் 





👉 படிவம் 6 பூர்த்தி செய்யும் முறை (இந்த படிவம் தமிழில் கிடைக்கிறது)





படிவம் 6 இல் கொடுக்கப்பட வேண்டிய விவரங்கள் 


👉 பெயர் (பெயரை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் நமது பெயர் தவறாக வரக்கூடும்) 

👉 குடும்ப பெயர் 

👉 பெற்றோர் அல்லது வாழ்க்கை துணைவர் பெயர் 

👉 மொபைல் எண் 

👉 மின்னஞ்சல் முகவரி 

👉 ஆதார் விவரம் 

👉 பிறந்த தேதி 




பிறந்த தேதிக்கான ஆதாரமாக கொடுக்கவேண்டிய ஆவணங்கள் 

(ஏதேனும் ஓன்று) 

👉 பிறப்புச் சான்றிதழ் 

👉 ஆதார் அட்டை 

👉பான் கார்டு 

👉 ஓட்டுநர் உரிமம் 

👉 10/12 ஆம் வகுப்பு சான்றிதழ் 

👉 கடவுசீட்டு 




இருப்பிடச்சான்றாக இணைக்கவேண்டிய ஆவணங்கள் 

👉மின் கட்டண அட்டை 

👉 எரிவாயு இணைப்பு ரசீது 

👉ஆதார் அட்டை 

👉கடவுசீட்டு 

👉வங்கி கணக்கு புத்தகம் 

👉 அஞ்சல் கணக்கு புத்தகம் 

👉 இருப்பிட சான்றை நிரூபிக்கும் வேறு ஆவணங்கள் இருந்தால் அத்தனையும் குறிப்பிட்டு இணைக்கலாம் 



ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள குடும்ப வாக்காளர் உடன்  இணைவதற்கு தேவையானவை 


👉 குடும்ப வாக்காளர்கள் இருக்கும் வரிசையில் அவர்களுடன் இணைவதற்கு அவர்களின் பெயர் உறவு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். இது ஒரே குடும்பத்தில் தந்தை தாய் உடன் குழந்தைகளும் கணவன் மனைவி ஒரே வரிசையில் இணைவதற்கும் குறிப்பிட வேண்டும் 




👉 படிவத்தின் இறுதியில் உள்ள உறுதிமொழியை வாசித்து கையொப்பம் இட வேண்டும் 




👉 நிரப்பப்பட்ட படிவத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து அலுவலரிடம் அளித்து அதற்கான ஒப்புகை சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் 




மாதிரி படிவம் கீழே