Search This Blog

Saturday, 3 January 2026

TAMILNADU ASSURED PENSION SYSTEM (TAPS) முற்றிலும் தமிழ்நாடு பென்ஷன் திட்டம் முதல்வர் அறிவிப்பு






TAMILNADU ASSURED PENSION SYSTEM (TAPS) முற்றிலும் தமிழ்நாடு பென்ஷன் திட்டம் முதல்வர் அறிவிப்பு 





புதிய பென்ஷன் திட்டம் ஒரு பார்வை முக்கிய அம்சங்கள் 







1. மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரச ஏற்கும் 








2. 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.  








3. ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.  










4. அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.











5. புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.









6. பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.








மேற்கூறிய TAPS திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்.  








இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்துத் வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடும்.  








அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனையும் அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையுடனும் நடைமுறை சாத்தியங்களுடனும் கூடிய வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபது ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியத்தையும்,  பணப் பயன்களையும் பெற வழிவகுக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த TAPS திட்டத்தினை,  அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.







முழுமையான விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்க 

👇

Friday, 2 January 2026

NMMS தேர்வுக்கான நுழைவுசீட்டு பதிவிறக்கம் செய்தல் சார்ந்து இணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்

 

NMMS தேர்வுக்கான நுழைவுசீட்டு வெளியீடு 




NMMS தேர்வுக்கான நுழைவுசீட்டு வெளியீடு/பதிவிறக்கம்   குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்கள் 





2025 - 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 10.01.2026 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது 





இத்தேர்விற்கு வருகை புரியும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலுடன் கூடிய வருகைத் தாட்கள் தேர்வு மையம் வாரியாக இணையதளத்தில் 05.01.2026 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது 






ஒவ்வொரு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தவறாமல் பெயர் பட்டியலினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் 





தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை 05.01.2026 பிற்பகல் முதல் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கீழ்கண்ட லிங்க் மூலம் சென்று அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் இருந்து தங்கள் பள்ளிக்கான USER ID/PASSWORD கொண்டு பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கவும், தேர்வு மைய விவரத்தினை மாணவர்களுக்கு தெரிவிக்கவும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது 






தேர்வு எழுதும் மாணவர்களின் நுழைவுச் சீட்டுகளில் பெயர் பிறந்த தேதி வகுப்பினம் ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின் திருத்தத்தினை சிவப்பு நிற மையினால் சுழித்து சரியான பதிவினை குறிப்பிட்டு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பம் இட அறிவுரை கூறப்பட்டுள்ளது 





புகைப்படம் மாறி இருந்தால் தேர்வுக்கூட நுழைவுசீட்டில் தேர்வு எழுதும் மாணவரின் சரியான புகைப்படத்தினை ஒட்டி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பம் இடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது 






மற்றொரு புகைப்படத்தினை பெயர்ப்பட்டியலில் ஓட்டுவதற்காக தேர்வு மையக்கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். எனவே மாணவர்கள் புகைப்படம் மாறி இருந்தால் ஒரு புகைப்படத்தை நுழைவு சீட்டில் ஒட்டி தலைமை ஆசிரியர் கையொப்பம் இடப்பட வேண்டும் மற்றொரு புகைப்படத்தை தேர்வு எழுதும் மையம் எடுத்து வந்து கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் 






தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள் இத்தகைய தேர்வரின் தேர்வுக்கூட நுழைவு சீட்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை பெயர்பட்டியலிலும் தவறாது மேற்கொள்ள வேண்டும் எனவும் தகவல்  வழங்கப்பட்டுள்ளது 





நுழைவுசீட்டு பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் (05.01.2026 பிற்பகல்)

👇 

CLICK HERE







இணை இயக்குனரின் செயல்முறைகள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇 

CLICK HERE




NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 




👇

CLICK HERE TO JOIN


முதன் முதலாக NMMS தேர்வுக்கு தேவையான 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முழுமையான மனவரைபடம் அனைத்து பாடங்களும் தயாரிப்பு S. விஷ்ணுகுமார், சென்னை







NMMS தேர்வுக்கு தேவையான முழுமையான 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் மனவரைபடம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது 




இது வரை இது போல் முழுமையான தேர்வுக்கு தேவையான முக்கிய குறிப்புகள் அடங்கிய மனவரைபடம் உருவாக்கப்படவில்லை 




ஒரு புதிய முயற்சியாக மாணவர்களுக்காக இதை உருவாக்கியவர் திரு. S.விஷ்ணுகுமார் அவர்கள் 




இவர் NMMS, TRUST தேர்வுகளில் தேர்ச்சி பெற்று போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருபவர் 




தொடர்ந்து இரு ஆண்டுகளுக்கு மேல் NMMS, TRUST, தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு, தமிழ் திறனறித் தேர்வு போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து அதிகமான மாணவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெற உதவியவர் 




தொடர்ந்து NMMS வாட்ஸ் அப் சானல் மூலமாக மாணவர்களுக்கு இலவசமாக ஆன்லைன் வகுப்பு நடத்தி வருபவர் 




சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை போன்ற மாவட்டப்பள்ளிகளுக்கு அனுமதி பெற்று நேரடி வகுப்பும் மாணவர்களுக்கு இலவசமாக நடத்தி வருபவர் 



தற்போது மாணவர்கள் பாடகருத்துக்களை எளிதான முறையில் நினைவில் கொள்ளவும், தேர்வுக்கு தேவையான முக்கியமான KEY WORDS அடங்கிய மனவரைபடம் 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் உருவாக்கியுள்ளார் 




இவர் ஏற்கனவே ஆங்கில வழியில் மாணவர்களுக்கு சமூக அறிவியல், அறிவியல் மற்றும் கணக்கு குறிப்புகளை அவ்வப்போது ஆன்லைன் வகுப்பில் வழங்கியவர் 




எளிய முறையில் இவர் நடத்தும் ஆன்லைன் வகுப்பானது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது 




தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இணையவழியில் பயிற்சி பெற்று தேர்வினை எழுதுவதற்கு தயார் நிலையில் உள்ளனர் 




அனைத்து மாணவர்களும் இந்த மனவரைபட புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் மிக எளிதான முறையில் நீங்கள் தேர்வினை எதிர்கொள்வ்தற்கு இந்த புத்தகம் கண்டிப்பாக உங்களுக்கு கைகொடுக்கும் 





புத்தகத்தின் சிறப்புகள் 

👉 தேர்வுக்கு தேவையான முக்கிய KEY WORDS கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது 




👉 தேவையான இடங்களில் சிறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது 




👉 நினைவிடங்கள், ஆண்டுகள், போன்றவை தெளிவாக எடுக்கப்பட்டுள்ளது 




👉 வண்ணமயமாக உருவாக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு எளிதாக முக்கிய கருத்துக்களை அடையாளம் காணமுடியும் 





👉 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்கள் முழுமையாக தயாரிக்கப்பட்டுள்ளது 





👉 ஆங்கில வழியில் முதன்முறையாக இந்த புத்தகம் NMMS தேர்வுக்கு தயாரிக்கப்பட்டுள்ளது 




👉 தற்போது 7 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர்கள், 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இது மிக உதவியாக இருக்கும் 




கீழே உள்ள லிங்க் மூலம் சென்று புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும் 

👇








இதை அழுத்தவும்

NMMS EXAM தொடர்பான ஆன்லைன் வகுப்புகள் ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 




👇

CLICK HERE TO JOIN