👉 ஆண்டுக்கு 10000 ரூபாய் உதவித்தொகை கல்லூரி இளநிலை படிப்பு வரை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
👉 இந்த உதவித்தொகை பெறுவதற்கு "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு" என்று அழைக்கப்படும் தேர்வில் வெற்றி பெறவேண்டும்
👉 இந்த தேர்வு இந்த கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர்கள் மட்டுமே எழுத முடியும்
👉 இந்த தேர்வு இரு தாள்களாக நடைபெறும்.
👉 முதல் தாளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடங்களில் உள்ள கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 கேட்கப்படும்
👉 இரண்டாவது தாளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 60 வினாக்கள் கேட்கப்படும்
👉 தேர்வில் கேட்கப்படும் அனைத்து வினாக்களும் கொள்குறி (சரியான விடையை தேர்ந்தெடு) வகையிலேயே கேட்கப்படும்
👉இந்த தேர்வு மூலம் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டின் படி 500 மாணவர்களும் 500 மாணவிகளும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
👉தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களும் ஆண்டுக்கு 10000 வீதம் அவர்களின் இளநிலை கல்லூரி படிப்பு வரை உதவித்தொகையாக பெறுவார்கள்
👉 அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மட்டுமே இந்த தேர்வினை எழுத முடியும்
👉 இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்கள் மிக எளிதாக அரசு பணிக்காக நடத்தப்படும் TNPSC தேர்வில் வெற்றி பெறமுடியும்
👉 இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தினை மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்
👉 விண்ணப்ப படிவம் 11.06.2024 முதல் 26.06.2024 வரை பதிவிறக்கம் செய்யலாம்
👉 விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மாணவர்கள் ரூபாய் 50 கட்டணத்துடன் மாணவர் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கவேண்டும்
👉பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கவேண்டிய கடைசி நாள் 26.06.2024
👉 தேர்வு நடைபெறும் நாள் 21.07.2024
விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் (11.06.2024 முதல் 26.06.2024 வரை பதிவிறக்கம் செய்யலாம்)
👇
இந்த "தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு" எழுதி வெற்றிபெற மாணவர்களுக்கு உறுதுணையாக நமது வலைத்தளம் மூலம் தொடர்ந்து ONLINE தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
ONLINE தேர்வு எழுதி பயிற்சி பெறவும், உங்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகள், NOTES, வினா விடை கையேடு போன்றவை பெறுவதற்கும் கீழே உள்ள வாட்ஸ் அப் குழுவில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இணையவும்
"ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர்கள் இந்த வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன் பெற உதவுங்கள்"
இந்த தேர்வு தொடர்பான வினா விடை ஆசிரியர்கள் தயார் செய்திருந்தால் 9952329008 என்ற எண்ணுக்கு அனுப்பி உதவுங்கள் உங்கள் பெயரிலேயே இந்த வலைதளத்தில் வெளியிடப்படும்
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு
இலவச பயிற்சி வாட்ஸ் அப் குழு 1
(TN CM TALENT EXAM GROUP)
👇👇
M.vetrivelmurugan
ReplyDeleteIt's good for each students
ReplyDelete