Search This Blog

Monday, 22 January 2024

NMMS தேர்வுக்கான HALL TICKET பதிவிறக்கம் செய்வது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இணை இயக்குனர் (மேல்நிலை) உத்தரவு


👉 2023-2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 03.02.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது 






👉 இத்தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர்பட்டியலுடன் கூடிய வருகைத்தாட்கள் தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 24.01.2024 (புதன் கிழமை) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது 









👉 NMMS தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுக்களை 24.01.2024 (புதன்கிழமை) பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பள்ளிக்கான USER ID/PASSWORD-ஐ  கொண்டு பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கவும், தேர்வு மைய விவரத்தினை மாணவர்களுக்கு தெரிவிக்கவும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் இணை இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார் 









👉 தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதை உறுதி செய்திடவும் இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார் 








👉 தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளில் பெயர்/புகைப்படம்/பிறந்த தேதி/வகுப்பினம் ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின் திருத்தத்தினை சிவப்பு நிற மையினால் சுழித்து சரியான பதிவினை குறிப்பிட்டு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சான்றொப்பம் பெற்று தேர்வெழுத அத்தேர்வர்களுக்கு அனுமதி வழங்க தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்துமாறும் இணை இயக்குனர் அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார் 







NMMS தேர்வுக்கான HALL TICKET  தொடர்பான இணை இயக்குனரின் ஆணைபெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



No comments:

Post a Comment