Search This Blog

Friday, 8 December 2023

1 முதல் 5 வகுப்புகளுக்கு ஆன்லைன் தேர்வு கிடையாது வினாத்தாள் பதிவிறக்கம் செய்து வைக்க வேண்டும்



1 முதல் 5 வகுப்புகளுக்கு ஆன்லைன் தேர்வு கிடையாது வினாத்தாள் பதிவிறக்கம் செய்து வைக்க வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் இணைந்து உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் 


கடந்த தேர்வுகளில் 1 முதல் 5 வரையில் பயிலும் மாணவர்களுக்கு ONLINE தேர்வு என புதிய முறையில் தேர்வு நடத்தப்பட்டது 


இந்த ONLINE தேர்வு முறை பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. மேலும் ஆசிரியர்களும் இதற்க்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வந்தனர் 


ONLINE தேர்வு முறையில் ஒரு மாணவனின் உண்மையான தகுதி, திறமைகளை அளவிட முடியாது அதற்கான தகுதி 1-5 மாணவர்களிடம் இல்லை 


கணினி பயின்று வரும் கல்லூரி மாணவர்களுக்கே இப்போதுதான் ஆன்லைன் தேர்வு என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது 


போட்டித்தேர்வு எழுதும் கல்லூரி, முதுகலை முடித்த மாணவர்களே ஆன்லைன் தேர்வை இப்போதுதான் எழுதி வருகின்றனர் 


ஆனால் 1-5 மாணவர்களுக்கு ONLINE தேர்வு எனும் போது அது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியது 


மேலும் மொபைல் போன் மூலம் தேர்வு என்பது குழந்தைகளுக்கு ஏற்புடையது அல்ல என்ற கருத்து பொதுமக்கள் அனைவரிடத்திலும் உள்ளது 


இப்போது நடைபெற உள்ள அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் அரசு தேர்வுத்துறை வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து தேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 


1-5 மாணவர்கள்  அரும்பு, மொட்டு, மலர் என அவர்களின் கற்றல் திறன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளனர் 


அந்த பிரிவுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும் 


1-3 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு 15.12.2023 அன்று அரையாண்டுத்தேர்வு தொடங்குகிறது 


4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12.12..2023 அன்று அரையாண்டுத்தேர்வு தொடங்குகிறது 


தேர்வுக்கான வினாத்தாள்களை அதற்க்கு முந்தைய தினத்தில் பதிவிறக்கம் செய்து பத்திரமாக வைத்து மறுநாள் தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது 


எண்ணும் எழுத்தும் தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள் கால அட்டவணையில் வழங்கியுள்ள படி தேர்விற்கு முந்தைய தினம் மதியம் 2 மணி முதல் டவுன்லோட் செய்வதற்கான வழிமுறை


வகுப்பு 1-3


மொழிப் பாடம்

14-12-2023 2 மணி முதல் 


ஆங்கிலம்

18-12-2023 2 மணி முதல்


கணக்கு

20-12-2023 2 மணி முதல் 


4 & 5 ஆம் வகுப்பு


மொழிப் பாடம்

11-12-2023 2 மணி முதல் 


ஆங்கிலம்

13-12-2023 2 மணி முதல்


கணக்கு

15-12-2023 2 மணி முதல் 


அறிவியல் 

19-12-2023 2 மணி முதல் 


சமூக அறிவியல் 

21-12-2023 2 மணி முதல்


டவுன்லோட் செய்து கொள்ளலாம்



மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் அழுத்தவும்













No comments:

Post a Comment