Search This Blog

Sunday, 13 November 2022

அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் வெற்றி பெரும் மாணவர்கள் வெளிநாடு கல்விச்சுற்றுலா செல்லலாம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

 



👉 2022-23 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள்அறிவிப்பினை அறிவித்துள்ளார் 


👉 "மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும்"


👉 கலைத் திருவிழா 

    பிரிவு 1: 6 முதல் 8 ஆம் வகுப்பு 

    பிரிவு 2: 9 மற்றும் 10 ஆம் வகுப்பு 

    பிரிவு 3: 11 மற்றும் 12 ஆம் வகுப்பு 


👉 போட்டிகள் முதலில் பள்ளி அளவிலும், வெற்றிபெறும் மாணவர்கள் பின்பு வட்டார அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் பங்கு பெறுவார் 


👉 மாநில அளவிலான போட்டிகள் ஜனவரி மாதம் நடத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்படும் 


👉 கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் வழங்கப்படும் 


👉 மாநில அளவில் தரவரிசையில் முதன்மை பெரும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் 


👉 கலைத்திருவிழா அட்டவணை 

    பள்ளி அளவில் 

        23.11.2022 முதல் 28.11.2022 வரை 

    வட்டார அளவில் 

        29.11.2022 முதல் 05.12.2022 வரை 

    மாவட்ட அளவில் 

        06.12.2022 முதல் 10.12.2022 வரை 

    மாநில அளவில் 

        03.01.2023 முதல் 09.01.2023 வரை 


👉EMIS வழியாக போட்டியில் பங்கு பெரும் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் 


மேலும் விவரம் அறிய கீழ்கண்ட 

லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


















































No comments:

Post a Comment