Search This Blog

Thursday, 12 May 2022

சாக்கடையை சுத்தப்படுத்தும் நவீன ரோபோ: கிருஷ்ணகிரி மாவட்டம் கம்மம்பள்ளி அரசு பள்ளி மாணவர் சாதனை


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கம்மம்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் விக்னேஷ் சாக்கடையை சுத்தப்படுத்தும் நவீன ரோபோவை கண்டுபிடித்துள்ளார்.




வெறும் 3000 ரூபாயில் மொபைல் ஆப் மூலம் இயங்கும் வண்ணம் இதை வடிவமைத்துள்ளார் 




இந்த ரோபோ நடந்து சென்று சாக்கடையில்  இறங்கி, குனிந்து சாக்கடையை அள்ளும் வகையில் உருவாக்கியுள்ளார் 




சாக்கடையில் இறங்கும் போது ரோபோவுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் இதை தயாரித்துள்ளார் 




சாக்கடையை அள்ளும் போது விஷவாயுக்கள் கசிந்து பலர் உயிரிழப்பாதல் தான் இந்த வகை ரோபோவை கண்டுபிடித்ததாக மாணவர் விக்னேஷ் கூறுகின்றார் 




மத்திய அரசின் ATAL LAB மூலமாக தங்கள் பள்ளியின் அறிவியல் ஆய்வகம் மேம்பாடு அடைந்து அதன் மூலம் மாணவர்களின் கண்டுபிடிப்பு ஆற்றல் அதிகரிப்பதாக பள்ளியின் அறிவியல் ஆசிரியர் திரு.சுபாஷ் தெரிவிக்கிறார் 





மேலும் இந்த ரோபோ பாடல்களுக்கும் நடனம் ஆடும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது 


வீடியோ 










No comments:

Post a Comment