Search This Blog

Tuesday, 22 February 2022

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நூலகம் சார்பில் நடந்த NMMS EXAM மாதிரி தேர்வு

 🌻 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் NMMS என்று அழைக்கப்படும் தேசிய வருவாய் வழி  கல்வி உதவித்தொகை தேர்வு நடந்து வருகிறது 


🌻 இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் 1000 ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் 


🌻 தற்போது 2 ஆண்டுகளாக கொரானா காலத்தில் நேரடி வகுப்புகள் இல்லை என்றாலும் ONLINE மூலமாக பல்வேறு மாவட்டத்தை சார்ந்த  ஆசிரியர்கள் இந்த தேர்வுக்கான பயிற்சியினை மாநிலம் முழுவதும் கொடுத்து வந்தனர் 


🌻 பல்வேறு மாவட்டத்தை சார்ந்த ஆசிரியர்கள் YOUTUBE மற்றும் GOOGLE MEET மூலமாக வகுப்புகள் எடுத்தும் ONLINE தேர்வு நடத்தியும் மாணவர்களுக்கு பயிற்சி  அளித்து வந்தனர் 


🌻 மாணவர்களுக்கு உதவியாக ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த ஆசிரியர் NMMS திரு.மோகன் என்பவரின் ஒருங்கிணைப்பில் 67 ஆசிரியர்கள் ஒன்றிணைந்து சென்னை வேளச்சேரி லயன்ஸ் கிளப் உதவியுடன் NMMS தேர்வுக்கு தேவையான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் புத்தகம் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது 


🌻 பல்வேறு மாவட்டங்களுக்கு அந்த புத்தகம் ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது 


🌻 பல மாவட்ட ஆசிரியர்கள் தாங்களாகவே தேர்வுக்கு தேவைக்கான பயிற்சி கையேட்டை தயாரித்து அவற்றை வாட்ஸப் குழுக்களில் அனுப்பி மாணவர்களிடம் சேர்க்கப்படுகிறது 


🌻 பல மாவட்ட ஆசிரியர்கள் NMMS தேர்வு பயிற்சிக்கு தேவையான வினாத்தாள்களை உருவாக்கி வாட்ஸப் குழுக்களில் அனுப்பி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது 


🌻 இந்நிலையில் தென்காசி மாவட்டம், செங்கோட்டை நூலகத்தில் நூலகம் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ பயிற்சி ஆசிரியர்களைக் கொண்டு தொடர்ந்து 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது 


🌻 கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து இந்த பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு பல்வேறு பகுதியை சார்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று வருகின்றனர் 


🌻 தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு நூலகம் சார்பில் பிரமாண்ட அளவில் பாராட்டு விழா நடத்தப்பட்டு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது 


🌻 இந்த ஆண்டும் அதுபோல் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு NMMS முதல் மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. 


🌻 ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த ஆசிரியர் NMMS திரு.மோகன் என்பவரால் மாநில அளவில் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது.


🌻 செங்கோட்டை நூலக நூலகர் திரு.ராமசாமி அவர்கள் தங்கள் நூலகத்தில் ஏற்கனவே TNPSC, TRB, TET போன்ற தேர்வுகளுக்கு தகுந்த ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு பயிற்சி அளித்து வருகிறார். 


🌻 அந்த வகையில் செங்கோட்டை நூலகத்தில் தற்போது NMMS தேர்வுக்கான பயிற்சியும்  வழங்கப்பட்டு மாதிரி தேர்வும்  நடத்தப்பட்டு வருகிறது.


🌻 செங்கோட்டை நூலகத்தின் இந்த தொடர்ச்சியான மாணவர்களுக்கான பணியை அப்பகுதி பெற்றோர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டி வருகின்றனர்


🌻. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்வு பெரும் மாணவர்கள் எண்ணிக்கை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செங்கோட்டை 

நூலகத்தில் 

NMMS 

மாதிரி தேர்வு 

வீடியோ 





No comments:

Post a Comment