Search This Blog

Wednesday 1 December 2021

கற்போம் எழுதுவோம் இயக்கம் மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிகள் விருதை ஒரே ஒன்றியத்தின் மூன்று பள்ளிகள் பெற்று சாதனை

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் , கற்போம் எழுதுவோம் இயக்கம் சார்பில் வயது வந்தோர்க்கான கற்பித்தல் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டு நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் வயது வந்தோர்களுக்கு கற்பிக்கும் மையமாக செயல்பட்டது 

அனைத்து கற்பித்தல் மையத்திற்கும்  அதே பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கற்பித்தல் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் வயது வந்தவர்கள் மற்றும் மூத்தகுடி மக்களுக்கு எழுத்தறிவு பயிற்சி வழங்கப்பட்டது

இதில் கிராமப்புறம் மற்றும் நகர்புறத்தில் வசிக்கும் வயது வந்தோர்கள் கலந்துக்கொண்டு எழுத்தறிவுப் பெற்றனர்.

இந்த கற்பித்தல் பணியில் சிறந்து விளங்கிய பள்ளிகள் ஒரு மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் 38 மாவட்டங்களில் 114 கற்போம் எழுதுவோம் மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதற்கான விருதுகள் வழங்கும் விழா 01.12.2021 அன்று திருச்சி மாவட்டம் காட்டூர் மாண்ட்போர்ட் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இந்த விழாவில் 

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், 

மாண்புமிகு ஊரக மற்றும் நகர்புறத்துறை அமைச்சர், 

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர், 

இணை இயக்குனர்கள் ஆகியோர் 

கலந்து கொண்டு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி விருது பெற்றவர்களை பாராட்டி வாழ்த்தி பேசினார்கள்.

விழாவில் 

திருச்சி மாவட்ட ஆட்சியர்,

திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

இவ்விழாவில் தென்காசி மாவட்டம் சார்பாக தென்காசி ஒன்றியத்தை சார்ந்த

திருச்சிற்றம்பலம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 

தென்காசி நகராட்சி 7வது வார்டு நடுநிலைப்பள்ளி மற்றும் 

தென்காசி R.C. தொடக்கப்பள்ளி 

ஆகிய 3 பள்ளிகள் அமைச்சர்கள் பொற்கரங்களால் சான்றிதழ் மற்றும் கேடயம் பெற்றன.

மூன்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 

திருமதி. சாரபின், 

திருமதி.ஜேனட் பொற்செல்வி, 

திருமதி. ஜெயசெல்வி 

மற்றும் மூன்று பள்ளிகளின் தன்னார்வலர்கள் 

கஸ்தூரி ராஜா, 

வரத காந்திமதி, 

தவசியம்மாள் 

ஆகியோர் கலந்துக்கொண்டு பாராட்டுச்சான்றும், விருதும் பெற்றனர்.

விழாவில் தென்காசி ஒன்றியம்  வட்டாரக் கல்வி அலுவலர் 

திரு.மாரியப்பன் 

அவர்கள் கலந்துக்கொண்டு விருது பெற்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களைப் பாராட்டினார்.

ஒரே ஒன்றியத்தை (தென்காசி) சார்ந்த 3 பள்ளிகள் விருது பெற்றது மிகப்பெருமைக்குரிய செய்தியாக கருதப்படுகிறது.



















No comments:

Post a Comment