Pages

Saturday, 19 October 2024

தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.இரா மாரியப்பன் அவர்கள் தலைமையில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு


தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் வட்டாரக்கல்வி  அலுவலர் திரு.இரா மாரியப்பன் அவர்கள் தலைமையில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வுக்கான  இலவச பயிற்சி வகுப்பு





NMMS எனப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு ஆண்டுதோறும் 8 வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது 





இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வீதம் நான்கு  ஆண்டுகளுக்கு 48000 ரூபாய் மாணவர்களின் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படும் 





தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் வட்டாரக்கல்வி அலுவலராக பணியாற்றிவரும் திரு . இரா . மாரியப்பன் அவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேல் ஒவ்வொரு ஆண்டும் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து மாணவர்களுக்கு NMMS தேர்வுக்கான பயிற்சியை இலவசமாக நடத்தி வருகிறார். 





மேலும் பயிற்சிக்கு  வரும் அனைத்து மாணவர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் மாதிரித் தேர்வும் நடத்தி வருகிறார். தேர்வில் கலந்து கொள்ள இயலாத மாணவர்களுக்கு வாட்ஸ் அப் குழுவில் தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைகள் அனுப்பி அவர்களை தேர்வு எழுத உதவி வருகிறார் 





இந்த பயிற்சியானது தென்காசி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெறுகிறது. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தலைமையில் மாணவர்கள் அழைத்து வரப்பட்டு பாதுகாப்பான முறையில் பயிற்சி நடைபெற்று வருகிறது 





தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் தொடர்ந்து பயிற்சிக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்கள் 





தென்காசி மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களில் இருந்தும்  மாணவர்கள் இங்கு வந்து பயிற்சி பெற்று செல்கின்றனர் 





இன்று 19.10.24 தென்காசி ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வைத்து வட்டாரக் கல்வி அலுவலர் திரு.ரா மாரியப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  பயிற்சி வகுப்பில் நடைபெற்ற  NMMS மாதிரித் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகள்  சங்கமித்ரா, பாலமித்ரன், மாலினி தானுஸ்ரீ ஆகியோருக்குப்  பாராட்டும்,பரிசும் வழங்கப்பட்டது.





கருத்தாளர்களாக தென்காசி மாவட்டம் மங்கலாபுரம் ருக்குமணி அம்மாள் உயர்நிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் திரு. நெல்சன், தென்காசி மாவட்டம் ,  செங்கோட்டை ஒன்றியம் தெற்குமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர் திருமதி.சுலேகாள்  பேகம் ஆகியோர் கலந்து கொண்டு கணிதம் மற்றும் MAT பாடப்பகுதியில் வகுப்புகள் நடத்தினர்.





தென்காசி மாவட்டம் சார்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் 150 பேருக்கும் மேல் வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் 












No comments:

Post a Comment