Pages

▼

Saturday, 19 October 2024

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளித்து மாண்புமிகு முதல்வர் உத்தரவு பிறப்பிப்பு






தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1 ஆம் தேதி (தீபாவளிக்கு மறுதினம்) அரசு விடுமுறை அளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் 






அனைத்து அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அனைத்து வகையான பள்ளிகள், கல்லூரிகள், போன்றவற்றுக்கு இந்த விடுமுறை விடப்பட்டுள்ளது 





தீபாவளி வியாழன் வருவதால் அதற்கு மறுதினம் விடுமுறை அளிக்கப்பட்டால் தொடர்ந்து நான்கு தினங்கள் விடுமுறை கிடைக்கும் .  வெளி மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறையில் தங்கள் ஊர்களுக்கு வந்த செல்ல வசதியாக இருக்கும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் அரசிடம் கோரிக்கை வைத்தன 





அதனை ஏற்ற தமிழ்நாடு முதலமைச்சர் தீபாவளிக்கு மறுதினம் அரசு விடுமுறையாக இன்று அறிவித்து உள்ளார்கள் 





மேலும் விடுமுறை விடப்பட்ட நாளுக்கு ஈடு செய்ய 09.11.2024 அன்று பணி நாளாக அறிவித்து முதலமைச்சர் உத்தரவு 






இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது 













    



 

No comments:

Post a Comment