Pages

▼

Wednesday, 11 November 2026

TRUST - தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு 12.11.2026 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

TRUST - தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு 12.11.2026 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்






TRUST தேர்வு குறித்து அரசு தேர்வுகள் இணை இயக்குனர் (பணியாளர்) திருமதி. கே.பி. மகேஸ்வரி அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்கள் 




அதில் உள்ள விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது 





21.11.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 12.11.2026 பிற்பகல்  முதல் பள்ளித் தலைமைஆசிரியர்கள் dgeapp.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பள்ளியின் USER ID / PASSWORD - ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ள உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 





மேலும், தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு (TRUST) விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமைஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு வழங்கவும், தேர்வு மைய விவரத்தினை அம்மாணவர்களுக்கு தெளிவாகத் தெரிவிக்கவும் தலைமைஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.





மேலும், தேர்வர்களின் தேர்வுக்கூட  நுழைவுச் சீட்டுகளில் பெயர் / பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின், சிவப்பு நிற மையினால் பிழையினைச் சுழித்து சரியான திருத்தத்தினைக் குறிப்பிட்டு அப்பள்ளித் தலைமைஆசிரியர் சான்றொப்பம் மற்றும் முத்திரையிட வேண்டும். 





அத்தேர்களைத் தேர்வெழுத அனுமதித்து பெயர்ப்பட்டியலில் திருத்தங்களை சிவப்பு மையினால் மேற்கொள்ளுமாறு அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.






தேர்வுக்கூட நுழைவுசீட்டு பெறுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

CLICK HERE

No comments:

Post a Comment