NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க 13.11.2026 வரை கால அவகாசம் நீட்டிப்பு
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குனர் திருமதி. க.சசிகலா அவர்கள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது
பொருள்:
சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) டிசம்பர் -2026 - பள்ளி மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்தல் - கால அவகாசம் நீட்டித்தல் - சார்பு.
பார்வை:
இவ்வலுவலக இதே எண்ணிட்டக் கடிதம், நாள். 26.10.2026
2026-2027-ம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) தேர்வு 12.12.2026 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 03.11.2026 என தெரிவிக்கப்பட்டது
தற்போது மாணவர்கள் நலன் கருதி இத்தேர்விற்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது, 13.11.2026 வரை நீட்டிக்கப்படுகிறது என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது
கீழே உள்ள லிங்க் மூலம் சென்று ஆணை பதிவிறக்கம் செய்யவும்
👇
No comments:
Post a Comment