திறன் மேம்பாட்டு சார்பாக மண்டல அளவிலான காணொலி ஆய்வுக் கூட்டம் மண்டலம் மற்றும் மாவட்டங்கள் பட்டியல் வெளியீடு
திறன் மேம்பாட்டு சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஒன்பது மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 12/12/2025 முதல் 22/12/2025 முடிய 9 நாட்களுக்கு 13/12/25 மற்றும் 20/12/25 ஆகிய இரண்டு சனிக்கிழமைகள் உட்பட மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள நிர்வாக குழுவினர்களைக் கொண்டு ஆய்வுக்கூட்டம் காணொலி மூலமாக இணைப்பில் குறிப்பிடப்பட்டள்ள அட்டவணைப்படி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரப்பட்டியல் இத்துடன் இணைத்து சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது.
எனவே, மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள நிர்வாக குழுவினர் அனைவரும், திறன் சார்ந்த மாணவர்களின் தற்போதைய முன்னேற்றம் விவரங்களுடன் காணொலி மூலமாக (GOOGLE MEET) நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் (அட்டவணையில் உள்ளவாறு) தவறாமல் பங்கேற்க வேண்டும் என மாவட்ட நிர்வாக குழுவினருக்கு தெரியப்படுத்துவதற்கு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது என ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது




Manoj
ReplyDelete