Pages

Thursday, 26 December 2024

கற்றல் கற்பித்தல் மற்றும் வீடியோ தயாரிப்பில் ஆர்வம் உள்ள ஆசிரியரா நீங்கள்? உங்களுக்கு அருமையான வாய்ப்பு


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இயக்குனர் அணைத்து இயக்குனர்களுக்கும் (பள்ளிக்கல்வி,  தொடக்கக்கல்வி மற்றும் தனியார் பள்ளி ) சுற்றறிக்கை ஓன்று அனுப்பியுள்ளார்கள் 






அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது 






அனைத்து வகை அரசு/அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் மற்றும் காணொலி உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட ஆசிரியர்களை அடையாளம் காண்டு அவர்கள் பற்றிய விவரங்களை அனுப்பிட கேட்டுள்ளார்கள் 






யார் யார் விண்ணப்பிக்கலாம் 



👉கற்றல் கற்பித்தல் மற்றும் காணொலி உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட அரசு, உதவி பெரும் அல்லது தனியார் பள்ளி ஆசிரியர்கள் 






👉 சிக்கலான தலைப்புகளை எளிமையாக,  சுவாரசியமாக மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கும் திறன் உடையவர்கள் 







👉 கேமராவின் முன் அனுபவம் இருந்தால் சிறப்பு .  அல்லது அது பற்றிய பயிற்சி வழங்கப்படும் 






👉 கற்றல் கற்பித்தலில் புதுமையான மற்றும் மகிழ்வான கற்றாழை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் 







👉 புதிய அணுகுமுறைகளை கற்றுக் கொள்ளும் ஆர்வமும் அதனை கற்றல் கற்பித்தலில் செயல்படுத்தும் திறனும் உடையவர்கள் 







ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பின்வருவனவற்றை சமர்ப்பிக்க வேண்டும் 



1. ஒரு சிறிய காணொலி (1-2 நிமிடம்) உங்கள் கற்பிக்கும் திறனை விளக்கும் வகையில் நீங்கள் ஆர்வமாக இருக்கும் தலைப்பில் ஒரு பாடத்தை கற்பிக்கும் மாதிரி காணொலி 



2. ஏற்கனவே காணொலி தயாரித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தால் அதற்கான இணைப்பு (வீடியோ லிங்க்) 




இதனை பற்றிய தெளிவுரை தேவைப்படின் தொடர்பு கொள்ளவேண்டிய ஒருங்கிணைப்பாளர் 



செல்வி .  பி . மேக்டலின் பிரேமலதா 

கைபேசி எண் 9443554078




தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டிய GOOGLE FORMS லிங்க் கீழே உள்ளது அதன் மூலம் தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்யலாம் 

👇👇

இதை அழுத்தவும்





மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் சென்று PDF பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

இதை அழுத்தவும்


No comments:

Post a Comment