Pages

Monday, 15 April 2024

மணற்கேணி செயலியில் இருந்து அறிவியல், கணிதம் அனிமேஷன் வீடியோக்களை smart board வழியே பதிவிறக்கம் செய்து தயாராக வைத்திருக்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு




6 முதல் 12 ஆம் வகுப்பு மாநில பாடத்திட்ட கணிதம் மற்றும் அறிவியல் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பாடங்களுக்கான காணொலி காட்சிகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் அனிமேஷன் வீடியோக்களாக மணற்கேணி செயலியில் வழங்கப்பட்டுள்ளது 







இதன் மூலம் ஒரு பாடப்பொருளை மிகத் தெளிவாகவும் உள்ளார்ந்த புரிதலுடனும் மாணவர்கள் கற்க இயலும் 







தற்போது கீழ்கண்ட மணற்கேணி இணையதள முகவரியின் வாயிலாக மணற்கேணி செயலியை அணுகவும், பாட விவரங்களை பதிவிறக்கம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது 






இச்செயலி வழியாக கட்டணம் எதுவுமின்றி அனைவரும் எளிதில் பதிவிறக்கம் செய்ய முடியும் 







வரும் கல்வி ஆண்டில் அனைத்து அரசு நடுநிலைப்பள்ளிகளில் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது. 







எனவே திறன் வகுப்பறைகள் மற்றும் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்களில் மணற்கேணி இணைய முகப்பின் வழியாக கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை போதிப்பதற்கு ஏற்ற வகையில் smart board-ல் அனிமேஷன் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் 







பதிவிறக்கம் செய்யப்பட பின்பு 6 முதல் 8 வகுப்பு பாடங்களுக்கான அனிமேஷன் வீடியோக்களில் இடம்பெற்றுள்ள பாடக்கருத்துக்கள் மற்றும் அந்த வீடியோக்கள் நல்ல முறையில் இயங்குகின்றனவா என்பதை பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் முன்கூட்டியே சரி பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார் 






மேலும் மணற்கேணி QR CODE அனைத்து பள்ளிகளிலும் ஆய்வகம் அமையும் அறையில்6-8 வகுப்பு மாணவர்கள் கல்வி பயிலும் வகுப்பறைகளில்  மற்றும்  ஒட்டி வைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார் 








மணற்கேணி செயலியின் இணையதள முகவரி 

👇👇

CLICK HERE





மேலே உள்ள லிங்க் வழியே சென்றால் LOGIN மற்றும் REGISTER என இரு OPTION காட்டும். அதில் புதிதாக செல்பவர்கள் REGISTER OPTION கொடுத்து செல்லவும் 





தங்கள் பெயர், அலைபேசி எண் கொடுத்து PASSWORD கொடுத்தபின்பு (நீங்கள் கொடுக்கும் நிரந்தர PASSWORD) உங்கள் அலைபேசிக்கு OTP வரும் அதனை TYPE செய்த பின்பு மணற்கேணி வலைத்தளத்திற்கு சென்றுவிடும் 





இதன் பிறகு உங்களுக்கு எந்த வகுப்பில் எந்த பாடப்பகுதி வீடியோ தேவையோ அதனை பதிவிறக்கம் செய்யலாம் 







மேலும் விவரம் அறிய தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

இங்கே அழுத்தவும்




No comments:

Post a Comment