Pages

Wednesday, 28 February 2024

2024-2025ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள்

 

அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகள் , நடுநிலைப்பள்ளிகள் , உயர்நிலைப்பள்ளிகள், மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் 5 வயது பூர்த்தியடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதற்கு 01.03.2024 முதல் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றிட அணைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆணை அனுப்பப்பட்டுள்ளது 


👉 மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி அதில் முக்கிய பிரமுகர்கள், அனைத்து துறை அலுவலர்கள் பங்கு பெறச் செய்து அரசு பள்ளிகளில் கட்டணமே பெறப்படாமல் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகின்றது என்பதை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் 



👉 மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்கள் மூலம் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து செய்தித்தாள்களில் செய்திகள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் 



👉 பள்ளிவாரியாக 5+ மாணவர்கள் ஏற்கனவே எடுத்துள்ள கணக்கெடுப்பை உறுதி செய்தல் 




👉 EER பதிவேடுபடி 5 வயது நிரம்பிய அனைத்து மாணவர்களையும் முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும் 




👉 அரசுப்பள்ளிகளில் தரமான இலவச கல்வி வழங்குவதை பொது மக்கள் அனைவரும் அறியும் வண்ணம் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க செய்ய வேண்டும் 



👉 காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தமிழ்வழிப்பிரிவு, ஆங்கிலவழிப்பிரிவு, தகுதியான ஆசிரியர்கள் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் போன்றவற்றை கூறி விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும் 




👉 விழிப்புணர்வு பேரணி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடத்திட வேண்டும் 



👉 அனைத்து ஆசிரியர்களையும் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் 



👉 சிறப்பு முகாம் மூலம் மாணவர் சேர்க்கையை கோடை விடுமுறைக்கு முன்பே மேற்கொள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பொறுப்புகளை பிரித்து வழங்கி சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் 




👉 ஒற்றை இலக்க மாணவர்கள் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு மாணவர்கள் எண்ணிக்கையை இரட்டை இலக்கத்திற்கு உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் 




மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

No comments:

Post a Comment