Pages

Thursday, 28 December 2023

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் மாநில அளவில் பதவி உயர்வு அரசாணை வெளியீடு



தொடக்கக் கல்வி நிருவாகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் முன்னுரிமை (Seniority) இது நாள் வரை ஒன்றியளவில் கடைபிடிக்கப்பட்டது. 




இதனால் பதவி உயர்வு அந்த ஒன்றியளவில் மட்டுமே வழங்ககூடிய நிலையில் இருந்தது. 




 



இதனால் மூத்த ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.




தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையினை   பல்வேறு சங்கங்கள் தமிழ்நாடு முதலமைச்சர்   கவனத்திற்கு கொண்டு சென்றன.




 

சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இப்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது 





தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு இனி பதவி உயர்வு மாநில அளவில் கிடைக்கும் 





அதேநேரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறவேண்டுமெனில் முதலில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து இருக்க வேண்டும்.




உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை (State Seniority) உள்ளது போலவே தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் இனி வரும் காலங்களில் மாநில முன்னுரிமை (State Seniority) அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படவேண்டும் என   தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுபடி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது



இனி அரசாணை 243 ன் படி மாநில முன்னுரிமையின் படி ஊ.ஒ.பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.




1.இடைநிலை ஆசிரியர்




2.தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்




3.பட்டதாரி ஆசிரியர்




4.நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்




5.வட்டாரக்கல்வி அலுவலர் 




இந்த வரிசைகளில் மட்டுமே இனி பதவி உயர்வு பெற முடியும்.




பாதிப்புகள்:-


1.மேலும் ஒரு இடைநிலை ஆசிரியர் நேரடியாக  பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாது.




2.ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நேரடியாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாது




ஆணை பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment