Pages

Sunday 10 December 2023

அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத்தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு முதலமைச்சர் உத்தரவு



நாளை 11.12.2023 அன்று தொடங்விருந்த அரையாண்டுத்தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் ஒத்திவைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் 







அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத்தேர்வு வருகிற 13.12.2023 அன்று தொடங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 






மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்கள் நலன் கருதி 04.12.2023 முதல் 09.12.2023 வரை பள்ளிகளுக்கு  அளிக்கப்பட்டது 






மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைகளின்படி மேற்கண்ட பாதிக்கப்பட்ட மாவட்டப்பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து வரும் 11.12.2023 அன்று பள்ளித் திறக்கும் நாளில் நல்ல சுற்றுச்சூழலை உருவாக்க பணிகள் விரைவாக முடுக்கிவிடப்பட்டுள்ளன 





இவற்றை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த 17 அதிகாரிகள் 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் 






இந்த பணிகளுக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 40 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 






இந்த மாவட்டப்பள்ளிகளில் பயிலும் நோட்டு பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்தவுடன் நோட்டு பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது 






சீருடை, புத்தகப்பை, போன்ற பொருட்களும் நாளை (11.12.2023) அன்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது 






மேலும் ஏற்கனவே 11.12.2023 அன்று அரையாண்டுத்தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில் புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்ற நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் நாளை திங்கள்கிழமை (11.12.2023) அன்று தொடங்கவுள்ள தேர்வுகளை புதன்கிழமை (13.12.2023) அன்று தொடங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு முதலமைச்சர் அறிவுரைகள் வழங்கியுள்ளார் 




பள்ளிக்கல்வித்துறையில் அரையாண்டுத்தேர்வு புதிய கால அட்டவணை விரைவில் வெளியிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் 



தமிழக அரசு செய்திக்குறிப்பு 



புதிய தேர்வு அட்டவணை






















No comments:

Post a Comment