Pages

▼

Tuesday, 7 November 2023

தமிழ்நாடு அரசு "சிறந்த பள்ளி" கேடயம் பெறும் பள்ளிகள் விவரம் மாவட்டப் பட்டியல் வெளியீடு

 


ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு மாநில அளவில் சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் வழங்கி வருகிறது


இந்த ஆண்டுக்கான சிறந்த பள்ளி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது


தென்காசி மாவட்டத்தில் 

தென்காசியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி (7வது வார்டு), 


செங்கோட்டையில் உள்ள கச்சேரிகாம்பவுண்டு அரசு நடுநிலைப்பள்ளி 

மற்றும் 


கீழப்பாவூர் ஒன்றியத்தில் உள்ள வெள்ளகால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

ஆகிய மூன்று பள்ளிகளும் தேர்வு பெற்றன.


ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அரசின் கேடயம் பெறுகிறது


இதற்கான விழா 14.11.2023 அன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது


விழாவில் விருது பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர் ஒருவர், வட்டாரக் கல்வி அலுவலர் ஆகிய மூவரும் கலந்து கொண்டு கேடயம் பெறுகிறார்கள்

































No comments:

Post a Comment