Pages

Thursday, 30 November 2023

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கிட மாநில திட்ட இயக்குனர் உத்தரவு


2023-2024 ஆம் ஆண்டிற்கான தற்காப்புக்கலைப் பயிற்சி வழங்குதல்- பயிற்சி சார்ந்து வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்குதல் -நிதி விடுவித்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்



👉 இந்த தற்காப்புக்கலைப் பயிற்சி தமிழகம் முழுவதிலும் உள்ள 6941 அரசு நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 6-8 மாணவியர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது 



👉 தமிழகம் முழுவதிலும் உள்ள 6267 உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கு இந்த தற்காப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது 


👉 தற்காப்புக்கலைப் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளருக்கு பயிற்சிக்கான ஊதியம் 4000/மாதம் வழங்கப்பட உள்ளது 



👉 மாதம் மாணவிகளுக்கு தேவையான சிற்றுண்ட்டி செலவு 1000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 



👉 பயிற்சியாளரை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தேர்வு செய்துகொள்ளலாம் 



👉 தற்காப்பு கலை பயிற்சி தொடர்பான தகவலை எமிஸ் இணையதளத்தில் தலைமை ஆசிரியர் பதிவு செய்திட வேண்டும் 



👉 பயிற்சி தொடர்பான வீடியோ பதிவு செய்து ஆவணப்படுத்திட வேண்டும் 



👉 கராத்தே. ஜூடோ, டெக்வேண்டோ, சிலம்பம் ஆகிய தற்காப்பு கலைகளில் ஏதேனும் ஒரு பயிற்சியை தேர்வு செய்து கொள்ளலாம் 



👉 பயிற்சி வாரத்தில் இரண்டு நாட்கள் குறிப்பிட்ட பாடவேளையில் நடத்தப்பட வேண்டும் 



👉6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவியர்களுக்கு  SYLLABUS 1 பாடத்திட்டத்தை பின்பற்றி பயிற்சி வழங்கப்பட வேண்டும் 



👉 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவியர்களுக்கு  SYLLABUS 2 பாடத்திட்டத்தை பின்பற்றி பயிற்சி வழங்கப்பட வேண்டும் 



👉 பயிற்சியானது பள்ளி வளாகத்திலேயே நடத்தப்பட வேண்டும் 



👉 ஒரு பள்ளியில் 100 மாணவியர்களுக்கு மிகாமலும், 10 மாணவியர்களுக்கு குறையாமலும் தற்காப்பு பயிற்சி வழங்கப்பட வேண்டும் 



👉 SMC, ALUMINI, SPONSORS, மூலம் பயிற்சிக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம் 



👉 பெண் பயிற்றுனர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் 



👉 பயிற்சியில் பங்கு பெரும் மாணவியர்களுக்கு வருகை பதிவு செய்யப்பட வேண்டும் 



👉 பயிற்சி நடைபெறுவதை SMC உறுப்பினர்கள் பார்வையிடவேண்டும் 



👉 பயிற்சியாளர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 



👉 சம்பத்தப்பட்ட கலையில் சான்றிதழ் பயிற்சி, பட்டயப்பயிற்சி, 1 ஆண்டு முதுநிலைப்பட்டாயப்படிப்பு, WORLD KARATE FEDERATION மூலமாக வழங்கப்படும் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும் 



👉 DON 4TH DEGREE IN KARATE (BLACK BELT) முடித்திருக்க வேண்டும் 



👉 இந்த பயிற்சியானது 3 மாதங்கள் நடைபெற உள்ளது 



மேலும் விவரங்கள் மற்றும் பயிற்சிக்கான பாடங்கள் பெற கீழே உள்ள லிங்க் வழியே பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


No comments:

Post a Comment