Pages

Tuesday, 1 August 2023

பள்ளிகளில் செயல்படும் மன்ற செயல்பாடுகள் குறித்த பள்ளிக்கல்வி இயக்குனரின் ஆணை


ஒட்டுமொத்த ஆளுமைப்பண்பினை மேம்படுத்தவும், ஒவ்வொருவரிடமும் காணப்படும் தனித்திறன்களை அடையாளம் காணவும், அதனை மேலும் செழுமைப்படுத்தவும், பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு கல்வி இணைச் செயல்பாடுகள்/மன்றங்களின் செயல்பாடுகள் காரணமாக அமைகின்றன.


2023-2024 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் நடைபெற வேண்டிய கல்வி இணை/கல்விசாரா செயல்பாடுகள் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன 


பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் நடைபெற வேண்டிய நிகழ்வுகள்/போட்டிகள் குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன 


👉 பள்ளிக்கால அட்டவணைப்படி ஒவ்வொரு வாரமும் கலைச்செயல்பாடுகளுக்கு இரு பாடவேலைகளும், மன்ற செயல்பாடுகளுக்கு இரு பாட வேலைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன 


👉 இந்த பாட வேளையில் செயல்பாடுகள் நடைபெறுவதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும் 


👉 அரசு/அரசு உதவி பெரும் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் அவர்களது ஆர்வம் மற்றும் விருப்பத்திற்கேற்ப மன்றத் செயல்பாடுகளில் பெங்கேற்பதை ஊக்குவிக்க வேண்டும் 


👉 பள்ளிகளில் செயல்படும் அனைத்து மன்றங்களுக்கு தலைமை ஆசிரியர் தலைவராக இருப்பார் 


👉 ஒவ்வொரு மாணவனும் ஏதேனும் ஒரு மன்றத்தில் இணைந்து செயல்படவேண்டும் 


👉 துடிப்பான ஆசிரியர்கள் மன்றத்தின் பொறுப்பாசிரியர்களாக செயல்படவேண்டும் 


பள்ளி அளவிலான போட்டிகள் 

👉 2023 ஆம் கல்வி ஆண்டு துவக்கம் முதல் பிப்ரவரி 2024 ஆம் மாதம் வரை ஒவ்வொரு மாதமும் பள்ளி அளவிலான போட்டிகள் நடைபெறவேண்டும் 


👉 ஒவ்வொரு மாதமும் மன்ற செயல்பாடுகள் பற்றி emis இணைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் 


மன்றங்கள் மற்றும் நிகழ்வுகள் 

1. இலக்கிய மன்றம் 

பேச்சுப்போட்டிகள், கட்டுரைப்போட்டிகள், கவிதை, திருக்குறள் ஒப்புவித்தல், திருக்குறள் காட்டும் அறநெறிகள் குறித்த விவாதம் , கதை சொல்லுதல், விவாத மேடை , இலக்கிய உரை வீச்சு 

2. வினாடி வினா மன்றம் 

ஊஞ்சல், தேன் சிட்டு இடம் பெற்ற  விவரங்கள் அடிப்படையில் வினாக்கள், நூலக புத்தகங்கள் உள்ள வினாக்கள், நடப்பு நிகழ்வுகள், பொதுஅறிவு 

3. வானவில் மன்றம் 

நடைமுறை வாழ்வில் அறிவியலின் பங்கு, அறிவியல் கண்காட்சி, செயல்திட்டங்கள், stem செயல்பாடுகள், அறிவியல் நாடகம், அறிவியல் கருத்துக்கள் தொடர்பான விவாதம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், நவீன அறிவியல் தொழிற்நுட்பங்கள் குறித்த உரையாடல் 


4. சிறார் திரைப்படம் 

திரைப்படம் குறித்த கருத்துக்களை எழுத செய்தல், படம் குறித்த விமர்சனம், பாத்திரம் குறித்த திறனாய்வு 


வட்டார அளவிலான போட்டிகள் 

ஆகஸ்ட்-2023, நவம்பர்-2023, பிப்ரவரி 2024 மாதங்களின் இறுதியில் நடைபெறும் 

ஆகஸ்ட் 2023 போட்டிகள் 

1. பேச்சுப்போட்டிகள் 

2. கட்டுரைப்போட்டிகள் 

3. கவிதை எழுதுதல் 

4. சிறார் திரைப்படம் கதை விமர்ச்சனம் 

5. தனிநபர் நடிப்பு 

6. குறும்படம் தயாரித்தல் 

7. வினாடி-வினா நிகழ்வு 

8. அறிவியல் கண்காட்சி 

9. அறிவியல் செயல்திட்டம் 

10. அறிவியல் நாடகம் 


நவம்பர் 2023 போட்டிகள் விவரம் 

1. பேச்சுப்போட்டிகள் 

2. கட்டுரைப்போட்டிகள் 

3. கவிதை எழுதுதல் 

4. சிறார் திரைப்படம் கதை விமர்ச்சனம் 

5. தனிநபர் நடிப்பு 

6. குறும்படம் தயாரித்தல் 

7. வினாடி-வினா நிகழ்வு 

8. அறிவியல் கண்காட்சி 

9. அறிவியல் செயல்திட்டம் 

10. அறிவியல் நாடகம் 


பிப்ரவரி 2024 போட்டிகள் விவரம் 

1. பேச்சுப்போட்டிகள் 

2. கட்டுரைப்போட்டிகள் 

3. கவிதை எழுதுதல் 

4. சிறார் திரைப்படம் கதை விமர்ச்சனம் 

5. தனிநபர் நடிப்பு 

6. குறும்படம் தயாரித்தல் 

7. வினாடி-வினா நிகழ்வு 

8. அறிவியல் கண்காட்சி 

9. அறிவியல் செயல்திட்டம் 

10. அறிவியல் நாடகம் 


மாவட்ட அளவிலான போட்டிகள் 

மார்ச்-2024

1. பேச்சுப்போட்டிகள் 

2. கட்டுரைப்போட்டிகள் 

3. கவிதை எழுதுதல் 

4. சிறார் திரைப்படம் கதை விமர்ச்சனம் 

5. தனிநபர் நடிப்பு 

6. குறும்படம் தயாரித்தல் 

7. வினாடி-வினா நிகழ்வு 

8. அறிவியல் கண்காட்சி 

9. அறிவியல் செயல்திட்டம் 

10. அறிவியல் நாடகம் 


மாநில அளவிலான நிகழ்வுகள் 

👉 மேற்கண்ட 10 நிகழ்வுகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெரும் மாணவர்கள் மொத்தம் 38 x 10 = 380 மாணவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் 


👉 இலக்கிய மன்ற நிகழ்வுகளில் 25 மாணவர்கள், சிறார் திரைப்பட நிகழ்வுகள் மூலம் 25 மாணவர்கள், வினாடி வினா மன்ற நிகழ்வுகள் மூலம் 25 மாணவர்கள், வானவில் மன்றத்தின்  நிகழ்வுகள் மூலம் 25 மாணவர்கள் என மொத்தம் 100 மாணவர்கள் வெளிநாட்டிற்கு கல்விச்ற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் 


மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் ஆணை பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

click here

No comments:

Post a Comment