Pages

Thursday 12 January 2023

பள்ளிகளில் இயங்கும் கல்வி இணை/கல்வி சாரா மன்றங்கள் மூலம் போட்டிகள் மாவட்ட அளவிலும் நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு மாணவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா செல்ல வாய்ப்பு


அரசு மற்றும் அரசு நிதியுதவி பெரும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெறும் மன்ற செயல்பாடுகளில் 6 முதல் 9 வரை பயிலும் அனைத்து மாணவர்களும் பங்கு பெற வேண்டும் 


இலக்கிய மன்றம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

சுற்றுச்சூழல் மன்றம் 

வினாடி வினா மன்றம் 

நுண் கலை மன்றம் 

திரைப்பட மன்றம் 

நிகழ்த்து கலைகள் மன்றம் 

கணினி நிரல் & எந்திரனியல் மன்றம் 

போன்ற மன்றங்கள் அனைத்து பள்ளிகளிலும் நிறுவி ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட வேண்டும் 


தொன்மை பாதுகாப்பு மன்றம் 

நுகர்வோர் மன்றம் 

பேரிடர் மேலாண்மை மன்றம் 

தகவல் தொழில்நுட்பமன்றம் 

குழந்தை உரிமை பாதுகாப்பு மன்றம் 

போன்ற மன்றங்களை நிறுவி அவரவர் பள்ளி சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படலாம் 


ஒவ்வொரு வாரமும் கலை செயல்பாடுகளுக்கென இரு பாடவேளைகளும் 

மன்ற செயல்பாடுகளுக்கென இரு பாடவேளைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன 


மன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்க இனி மாதந்தோறும் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் 


போட்டிகள் முதலில் பள்ளி அளவிலும், பின்பு வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் நடத்தப்பட வேண்டும்.


மாநில அளவில் வெற்றி பெரும் மாணவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறுவார்கள் 


பள்ளி அளவில் மன்ற செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களின் படைப்புகள் "தென்சிட்டு சிறார் இதழ்" வெளியிடப்படும் 


இவ்வாறு ஆணையரின் செயல்முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது 


மேலும் போட்டிகள் நடைபெற வேண்டிய கால அட்டவணையும் கொடுக்கப்பட்டுள்ளது 


மேலும் விவரங்களுக்கு 

pdf பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்










No comments:

Post a Comment