Pages

▼

Wednesday, 7 December 2022

"கலைத் திருவிழா போட்டிகள்" மாநில அளவிலான போட்டி தேதிகள் திடீர் மாற்றம்


6 முதல் 12 வகுப்புகளில் பயிலும்  மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்திட அறிவுறுத்தப்பட்டு 05.12.2022 வரை அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் வட்டார அளவில் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.


இதனை தொடர்ந்து பல மாவட்டங்களில் மாவட்ட அளவிலான போட்டிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.


11.11.2022 நாளிட்ட செயல்முறைகளின்படி மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் 03.01.2023 முதல் 09.01.2023க்குள் நடத்தி முடிக்க தெரிவிக்கப்பட்டது 


தற்போது நிர்வாக காரணங்களுக்காக மாநில அளவிலான போட்டிகள் 27.12.2022 முதல் 30.12.2022க்குள் நடத்தப்பட உள்ளது 


மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் இடங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என மாநில திட்ட இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை  அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்












No comments:

Post a Comment