Pages

Friday 11 November 2022

அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 14.11.22 அன்று காலை இறைவணக்கக் கூட்டத்தில் எடுக்க வேண்டிய உறுதிமொழி




உறுதி மொழி 

 

Ø தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் ஆகிய நாங்கள் மாணவர்களாகிய நாங்கள் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் ஓர் உறுதி ஏற்கிறோம்

 

Ø சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் நலனுக்காகவும் எப்பொழுதும் உடன் நிற்போம் என்றும் அவர்களுக்கு இருக்கக்கூடிய சமூக பொருளாதார பண்பாட்டு சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்றும் உறுதி கூறுகிறோம் .

 

Ø முழுமையாகவும் சமத்துவத்துடனும் வெற்றிகரமாகவும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இங்கு எந்த பாகுபாடும் இன்றி அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்குரிய பாதுகாப்பை அவர்களுக்கு அளிப்பது இன்றியமையாதது என நாங்கள்  உணர்த்துகின்றோம்

 

Ø அவர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே முக்கியத்துவம் அளித்து நட்புணர்வை வளர்ப்போம் என்றும் உறுதிமொழி ஏற்கிறோம்

 

 

   மேலே குறிப்பிட்ட உறுதிமொழியினை அனைத்து தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வருகின்ற 14.11.2022 அன்று காலை பள்ளியில் காலை வணக்க கூட்டத்தில் அனைத்து குழந்தைகளும் உறுதி மொழியினை ஏற்க அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது 




No comments:

Post a Comment