இந்திய
தொழில்நுட்பக் கழகங்கள்,
இந்திய
அறிவியல் கழகம்,
அனைத்திந்திய
மருத்துவ அறிவியல்
கழகங்கள்
போன்ற உயர்க்கல்வி
நிறுவனங்களில் சேர
மாணவர்களுக்கு
இது உதவியாக இருக்கும்
இந்நிறுவனங்களில்
இளநிலை பட்டப்படிப்பு
பயில்வதற்கான
முழுச் செலவையும்
மாநில அரசே ஏற்கும்
6 முதல் 12 ஆம் வகுப்பு
வரையில்
அரசுப் பள்ளிகளில்
பயின்றுள்ள
மாணவர்கள்
இந்த உதவியைப்
பெறலாம்
பெற்றோர்களின்
ஆண்டு வருமானம்
கணக்கில்
எடுத்துக்கொள்ளவில்லை
மேற்படி
உயர்கல்வி நிறுவனங்களில்
சேர்க்கைப்பெற்ற
மாணவர்கள்
அந்த கல்லூரியில் சேர
நடந்த நுழைவுத்தேர்வில்
எடுத்த மதிப்பெண் பட்டியல்,
சேர்க்கை ஆணை,
கல்வி நிறுவனத்தின்
தலைவரால் வழங்கப்படும்
உண்மைச் சான்றிதழ்
(Bonafide Certificate)
மற்றும்
அக்கல்வி நிறுவனங்களில்
வசூலிக்கப்படும்
அனைத்து
கட்டண விவரங்களுடன்
தன் சொந்த மாவட்டத்தின்
மாவட்ட ஆட்சித்தலைவரின்
அலுவலகத்தில் சென்று
விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரம் அறிய
கீழே உள்ள லிங்க்
மூலம் அரசாணை
பதிவிறக்கம் செய்யவும்
👇👇
No comments:
Post a Comment