Pages

Saturday 2 July 2022

எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்துவது குறித்து சில வழிகாட்டு யோசனைகள் ஆசிரியர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம்



🌹 எண்ணும் எழுத்தும் 

திட்டமானது 

அனைத்து அரசு மற்றும் 

அரசு உதவிபெறும் 

பள்ளிகளில் உள்ள 

1,2,3 வகுப்பு 

மாணவர்களுக்கு 

செயல்படுத்தப்பட வேண்டும்.



🌹  இத்திட்டத்தை 

செயல்படுத்துவதற்காக 

பள்ளிகளுக்கு 

பாட வாரியாக

🌷    ஆசிரியர் 

    கையேடு 


🌷    மாணவர் 

    பயிற்சி புத்தகம் 


🌷எண்ணும் 

    எழுத்தும் கற்றல் 

    கற்பித்தல் பெட்டி (FLN kit) 

    வழங்கப்பட்டுள்ளது.


🌹 முதல் வகுப்பு 

    மாணவர்களுக்கு 

    அரும்பு பயிற்சி நூலும்,

    இரண்டாம் வகுப்பு 

    மாணவர்களுக்கு 

    மொட்டு பயிற்சி நூல்

    மூன்றாம் வகுப்பு 

    மாணவர்களுக்கு 

    மலர்பயிற்சி புத்தகங்கள் 

    வழங்கப்பட வேண்டும். 


🌹 மொட்டு பயிற்சி 

    புத்தகத்தில் 

    அரும்பு நிலை 

    மாணவர்களுக்கான 

    பயிற்சியும் 

    இணைக்கப்பட்டு இருக்கும்.

    எனவே 

    இரண்டாம் வகுப்பு 

    மாணவர்களுக்கு 

    மொட்டு மட்டுமே 

    பயன்படுத்த வேண்டும் . 

    மலர் பயிற்சி புத்தகத்தில் 

    அரும்பு, மொட்டு நிலை 

    மாணவர்களுக்கான 

    பயிற்சிகள் 

    இணைக்கப்பட்டுள்ளது..

     எனவே 

    மூன்றாம் வகுப்பு 

    மாணவர்களுக்கு 

    மலர் பயிற்சி புத்தகம் 

    மட்டுமே 

    பயன்படுத்த வேண்டும். 



🌹  ஒவ்வொரு வாரத்திற்கான 

    செயல்பாடு முடிந்தவுடன் 

    இறுதியில் 

    "சிறகை விரிப்போம்" 

    என்ற பகுதியில் 

    மூன்று நிலை 

    மாணவர்களுக்கும் 

    பயிற்சி புத்தகம் 

    மற்றும் பாட புத்தகத்தில் 

    எந்த செயல்பாடு 

    வழங்கப்பட வேண்டும் 

    என ஆசிரியர் கையேட்டில் 

    தெளிவாக உள்ளது.


 

🌹  ஒன்றாம் வகுப்பு 

    அரும்பு மட்டுமே 

    பயன்படுத்த வேண்டும்.

    இரண்டாம் வகுப்பு 

    மாணவருக்கு 

    மொட்டு பயிற்சி புத்தகம் 

    (அரும்பு அதில் 

    இணைந்தே இருக்கும்) 

    மட்டுமே 

    பயன்படுத்த வேண்டும்.

    மூன்றாம் வகுப்பு 

    மாணவர்களுக்கு 

    மலர் பயிற்சி புத்தகம் 

    (அரும்பு மற்றும் மொட்டு 

    இரண்டும் அதில் உள்ளது) 

    மட்டுமே பயன்படுத்த 

    வேண்டும்.



🌹 பாடப் புத்தகம் 

    முதல் வகுப்பு 

    மாணவர்களுக்கு 

    முதல் வகுப்பு 

    பாட புத்தகம் 

    மட்டுமே பயன்படுத்த 

    வேண்டும்.

    இரண்டாம் வகுப்பு 

    மாணவர்களுக்கு 

    இரண்டாம் வகுப்பு 

    பாட புத்தகம் 

    மட்டுமே 

    பயன்படுத்த வேண்டும்

     மூன்றாம் வகுப்பு 

    மாணவர்களுக்கு 

    மூன்றாம் வகுப்பு 

    பாட புத்தகம் மட்டுமே 

    பயன்படுத்த வேண்டும்.



🌹 இப்பயிற்சி புத்தகங்கள் 

     அரும்பு - நீலம் 

     மொட்டு - மஞ்சள் 

     மலர் - பச்சை 

    வண்ணங்களில் 

    வடிவமைக்கப்பட்டுள்ளது.



🌹  அனைத்து 

    1,2,3 வகுப்புகளை 

    கையாளும் ஆசிரியர்கள் 

    பாடக்குறிப்பு படிவம் 

    (lesson plan format) 

    பாடவாரியாக 

    தமிழ் ,ஆங்கிலம் 

    கணிதம் ஒவ்வொரு 

    வாரமும் எழுத வேண்டும் .


🌹  பாடக்குறிப்பு படிவம் 

    எவ்வாறு எழுதுவது 

    என்பதற்கான மாதிரி 

    படிவம் 

    கொடுக்கப்பட்டுள்ளது.


🌹  அறிவியல் மற்றும் 

    சமூக அறிவியல் 

    பாடங்களும் 

    நடத்தப்படவேண்டும் 

    பாடங்கள் எப்பொழுது 

    நடத்த வேண்டும், 

    எந்தெந்த பாடவேளைகளில் 

    எந்தெந்த பாடங்களை 

    கையாள வேண்டும் 

    என்பதற்கான 

    கால அட்டவணையும் 

    தங்களுக்கு 

    வழங்கப்பட்டுள்ளது .



🌹  ஒவ்வொரு வகுப்பிலும் 

    கற்றல் கற்பித்தல் 

    செயல்பாட்டிற்காக 

    செய்யப்படும் 

    துணைக்கருவிகள் 

    வகுப்பறையில் 

    காட்சிப்படுத்த வேண்டும்.



🌹  ஒவ்வொரு பாடத்திற்கும்  

    களங்கள் 

    வழங்கப்பட்டுள்ளது.


 தமிழ் 

🌷 பாடல் களம்

 🌷 கதைக்களம்

🌷 படித்தல் களம்  

🌷 படைத்தல் களம் 

🌷 செயல்பாட்டு களம்



 English 

🌷 Song corner

🌷 Story corner

🌷 Reading corner 

🌷 Creativity corner 

🌷 Activity corner



 கணிதம் 

🌷 பாடல் களம்   

🌷 பொம்மலாட்டம் 

🌷 தனிநடிப்பு பேச்சு 

🌷 செயல்பாடு களம்

🌷 கலையும் கைவண்ணமும் 

🌷 வினாடி வினா.


மேற்கண்டவாறு 

வகுப்பறையில் 

கற்பித்தல் 

துணைக்கருவிகள் 

காட்சிப்படுத்த வேண்டும்.



🌹  அனைத்து ஆசிரியர்களும் 

    TN-SED app download 

    செய்து அதை 

    update செய்து 

    கொள்ளவேண்டும் .



🌹  எண்ணும் எழுத்தும் 

    மதிப்பீட்டிற்கான 

    (Evaluation) கட்டகம் 

    இதில் 

    வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இம் மதிப்பீட்டினை 

    4.7 2022 முதல் 

    8.7. 2022 க்குள் 

    முடிக்க வேண்டும்



🌹  ஒவ்வொரு ஆசிரியரும் 

    தங்களுக்கான 

     Individual staff I'd 

    and password 

    பயன்படுத்தி 

    தங்கள் வகுப்பு 

    மற்றும் தாங்கள் 

    கையாளும் மீடியம் 

    பதிவு செய்ய வேண்டும்.


 

👉 இது ஒரு முறை 

    பதிவு செய்தால் போதுமானது. 


👉 ஒவ்வொரு 

    வாரத்திற்கும்FA(a)

    செயல்பாடாக 

    வழங்கப்பட வேண்டிய 

    செயல்பாடுகளும் 

    உங்களுக்கு 

    கொடுக்கப்பட்டுள்ளது .


👉 தமிழ்

    ஆங்கிலம் 

    கணிதம் 

    இந்த மூன்று 

    பாடங்களுக்கும் 

    ஏதேனும் 

    நான்கு செயல்பாடுகளை 

    செய்யவைத்து 

    அதை செயலியில் 

    பதிவு 

    செய்ய வேண்டும்.



 👉 ஒவ்வொரு 

    வெள்ளிக்கிழமையும் 

    FA (b)செயல்பாடு 

    செய்யும் வகையில் 

    எண்ணும் எழுத்தும் 

    செயலி 

    வடிவமைக்கப்பட்டுள்ளது .



👉 மதிப்பீடு 

    நடத்துவதற்கான 

    நேரம் கால 

    அட்டவணை 

    கொடுக்கப்பட்டுள்ளது.



👉 மதிப்பீடு

    Fa (b) 22.7. 2022

    முதல் 

    நடத்தப்பட வேண்டும்.



 👉 Fa (a), Fa (b) 

    ஒவ்வொரு 

    பாடத்திற்கும் 

    தனித்தனியாக 

    நடத்தப்படவேண்டும் .



👉 செயலி வாயிலாக 

    நடத்தப்பட வேண்டிய 

    மதிப்பீடு எவ்வாறு 

    நடத்துவது என்பதற்கான 

    டிஜிட்டல் வீடியோ 

    தங்களுக்கு 

    வழங்கப்படும்.



👉 பருவ இறுதியில் 

    நடத்தப்படும் 

    தொகுத்தறி மதிப்பீடு (SA)

    TN  SED APP வாயிலாக 

    ஆசிரியர்களுக்கு 

    வழங்கப்பட உள்ளது.



👉 தங்கள் வகுப்பறையில் 

    செய்யும் செயல்பாடுகளை 

    செயலியில் தாங்கள் 

    பதிவேற்றம் 

    செய்து கொள்வதற்கான 

    வாய்ப்பும் 

    வழங்கப்படும்.



👉 வழங்கப்பட்டுள்ள 

    கால அட்டவணையைப் 

    பயன்படுத்தி மட்டுமே 

    கற்றல் கற்பித்தல் 

    செயல்பாடுகளை 

    வகுப்பறையில் 

    செயல்படுத்த வேண்டும்.


👉 செயலியில் 

    CCE format வழங்கப்பட 

    உள்ளதால் இது தவிர 

    தனியாக CCE 

    பதிவேடுகளை 

    ஆசிரியர்கள் 

    பராமரிக்க 

    வேண்டியது இல்லை.



     தலைமை ஆசிரியர்களின் 

    கவனத்திற்கு 


👉 2 ஆசிரியர்கள் 

    மட்டுமே உள்ள பள்ளி 

    என்றால் 1,2,3 வகுப்புகளை 

    ஒரு ஆசிரியரும் 

    4,5 வகுப்புகளை 

    மற்றொரு ஆசிரியரும் 

    கையாள வேண்டும்.



👉 ஒவ்வொரு 

    தலைமை ஆசிரியரும் 

    ஒவ்வொரு வகுப்புக்கும் 

    ஒரு டம்மி ஸ்டேஜ் 

    மற்றும் டம்மி மைக் 

    ஏற்படுத்திக் 

    கொடுக்க வேண்டும்.


👉 மாத இறுதியில் 

    நடைபெறும் 

    பள்ளி மேலாண்மை 

    குழு கூட்டத்தில் 

    எண்ணும் 

    எழுத்தும் திட்டம் 

    பற்றியும் அதன் 

    செயல்பாடுகள் 

    நடவடிக்கைகள் மற்றும் 

    முன்னேற்றத்தை 

    பெற்றோர்களுக்கு 

    பதிவு செய்ய வேண்டும்.



👉 இரண்டு 

    மாதங்களுக்கு 

    ஒருமுறை 

    மாத இறுதி 

    வேலைநாளில் 

    தனித்திறன் 

    கொண்டாட்டம் 

    பள்ளிகளில் 

    செயல்படுத்தப்பட 

    வேண்டும்.


👉 தனித்திறன் 

    கொண்டாட்டம் 

    மாணவர்களின் 

    பாடம் சார்ந்த 

    மாணவர்களின் 

    தனித்திறமையை 

    வெளிக்கொணரும் 

    வகையில் 

    தனியாகவோ 

    குழுவாகவோ 

    நிகழ்ச்சிகள் 

    நடத்தப்பட வேண்டும்.

    ஏதேனும் சந்தேகம் 

    என்றால் 

    ஆசிரியர் பயிற்றுநரை 

    தொடர்பு கொள்ளவும்.



👉 எண்ணும் எழுத்தும் 

    திட்டத்தை 

    வகுப்பறையில் 

    முறையாக 

    செயல்படுத்தி 

    மாணவர்களின் 

    கற்றல் திறனை 

    மேம்படுத்த 

    அனைத்து 

    ஆசிரியர்களுக்கும் 

    வாழ்த்துக்கள்

👍👍👍👍👍👍👍👍👍👍

No comments:

Post a Comment