- உயிரியியலின் புதிர் என அழைக்கப்படுவது எது ? வைரஸ்
- புகையிலை சாற்றில் இருந்து வைரஸை படிகப்படுத்தியவர் யார் ? W.M. ஸ்டான்லி
- பெரியம்மைக்கு தடுப்பூசி கண்டுபிடித்தவர் யார்? எட்வர்ட் ஜென்னர்
- புகையிலையில் தேமல் நோய் வைரஸ் பற்றி விளக்கியவர் யார்? அடால்ப் மேயர்
- வைரஸ்கள் பாக்டீரியாவை விட சிறியது என நிரூபித்தவர் யார்? டிமிட்ரி ஐவான்ஸ்க்கி
- புகையிலையில் உள்ள தொற்றுதல் காரணியை "தொற்றுத் தன்மை வாய்ந்த உயிருள்ள திரவம் என அழைத்தவர் யார்? M.W. பெய்ஜி ரிங்க்
- பாக்டீரியங்களில் வைரஸ் தொற்றைக் கண்டுபிடித்தவர் யார்? F.W. ட்வார்ட்
- பாக்டீரியபாஜ் என்ற சொல்லை பயன்படுத்தியவர் யார்? டி ஹெரில்லி
- HIV யை கண்டுபிடித்தவர்கள் யார்? லுக் மான்டக்னர் மற்றும் இராபர்ட் கேலோ
- பொதுவாக வைரஸ்கள் எந்த அளவு விட்டம் உடையது? 20nm - 300nm
- பாக்டீரியபாஜ் வைரஸ்கள் எந்த அளவு விட்டம் உடையது? 10nm - 100nm
- TMV வைரஸ்கள் எந்த அளவு உடையது? 300 X 20nm
- வைரஸ் என்ற சொல்லின் பொருள் என்ன? நச்சு
- வைரஸ் பெற்றுள்ள அமிலங்கள் எவை? DNA அல்லது RNA
- கன சதுர வைரஸ்களுக்கு உதாரணம் ? அடினோ வைரஸ் மற்றும் ஹெர்ப்பஸ் வைரஸ்
- சுருள் வடிவ வைரஸ்களுக்கு உதாரணம் தருக ? இன்புளுயென்சா வைரஸ் மற்றும் TMV
- சிக்கலான அல்லது இயல்பற்ற வடிவம் கொண்ட வைரஸ்களுக்கு உதாரணம் தருக ? பாக்டீரியபேஜ் மற்றும் வாக்சினியா வைரஸ்
- dsDNA கொண்ட வைரஸ்களுக்கு உதாரணம் தருக? அடினோ வைரஸ்கள்
- வெளிப்பாடடையும் ssDNA வைரஸ்களுக்கு உதாரணம் தருக? பார்வோ வைரஸ்கள்
- dsRNA கொண்ட வைரஸ்களுக்கு உதாரணம் தருக? ரியோ வைரஸ்கள்
- வெளிப்பாடடையும் ssRNA வைரஸ்களுக்கு உதாரணம் தருக? டோகோ வைரஸ்கள்
- வெளிப்பாடடையாத ssRNA வைரஸ்களுக்கு உதாரணம் தருக? ராப்டோ வைரஸ்கள்
- வெளிப்பாடடையும் ssRNA-RT: கொண்ட வைரஸ்கள் வாழ்க்கைச் சுழற்சியில் DNA உடன் இனப்பெருக்கம் அடையும் வைரஸ்களுக்கு உதாரணம் தருக? ரெட்ரோ வைரஸ்கள்
- dsDNA-RT: கொண்ட வைரஸ்கள் வாழ்க்கைச் சுழற்சியில் RNA உடன் இனப்பெருக்கம் அடையும் வைரஸ்களுக்கு உதாரணம் தருக? ஹெபாட்னா வைரஸ்கள்
- உட்கரு அமிலம் சிறு சிறு துண்டுகளாக எந்த வைரஸ்களில் காணப்படுகிறது? காயக்கழலை வைரஸ் மற்றும் இன்புளுயென்சா வைரஸ்
- DNA வை கொண்ட வைரஸ்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? டீ ஆக்சி வைரஸ்கள்
- RNA வை கொண்ட வைரஸ்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ரிபோ வைரஸ்கள்
- விலங்கு மற்றும் பாக்டீரிய வைரஸ்கள் பொதுவாக எந்த உட்கரு அமிலங்களை கொண்டுள்ளது? DNA வைரஸ்கள்
- தாவர வைரஸ்கள் பொதுவாக எந்த உட்கரு அமிலங்களை கொண்டுள்ளது? RNA வைரஸ்கள்
- HIV வைரஸ் (ரெட்ரா வைரஸ்) எந்த உட்கரு அமிலத்தை கொண்டுள்ளது? RNA
- புகையிலை தேமல் வைரஸ் எந்த ஆண்டில் டிமிட்ரி ஐவனாஸ்கி என்பவரால் கண்டறியப்பட்டது? 1892
- புகையிலை தேமல் வைரஸின் மூலக்கூறு எடை என்ன? 39x106 டால்டன்கள்
- புகையிலை தேமல் வைரஸின் அளவு என்ன? 300 x 20nm
- புகையிலை தேமல் வைரஸின் ( TMV), RNA எத்தனை நியூக்ளியோடைட்களைக் கொண்டுள்ளது ? 6,500
- ஒரு முழு TMV துகள் உருவாவதற்கான மரபியல் தகவல் எங்கு உள்ளது? RNA வில்
- பாக்டீரியங்களை தாக்கி அழிக்கும் வைரஸ்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? பாக்டீரியபாஜ்கள்
- பாக்டீரியபாஜ்கள் என்பதன் பொருள் என்ன? பாக்டீரிய உண்ணிகள்
- T4 பாஜ்கள் (பாக்டீரியபாஜ்கள்) எந்த வடிவம் கொண்டவை? தலைப்பிரட்டை வடிவம்
- T4 பாஜ்களின் (பாக்டீரியபாஜ்கள்) தலைப்பகுதி எந்த வடிவம் கொண்டது? அறுங்கோண வடிவம்
- T4 பாஜ்களின் (பாக்டீரியபாஜ்கள்) தலைப்பகுதி எத்தனை புரதத்துணை அலகுகளால் ஆனது? 2000
- நீலப்பசும் பாசிகளைத் தாக்கும் வைரஸ்களை முதன் முதலில் கண்டுபிடித்தவர்கள் யார்? சாபர்மேன் மற்றும் மோரிஸ் (1963)
- நீலப்பசும் பாசிகளைத் தாக்கும் வைரஸ்களின் பெயர் என்ன? சயனோபாஜிகள்
- சயனோபாஜிகளுக்கு உதாரணம் தருக? LPPI-லிங்பயா, ப்ளக் டோனிமா , பார் மிடியம்
- வளர்ப்புக் காளான்களில் நுனியடி இறப்பு நோய் உண்டாக்கக்கூடிய வைரஸ்களை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? ஹோலிங்ஸ் (1962)
- பூஞ்சைகளைத் தாக்கக்கூடிய வைரஸ்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? மைக்கோ வைரஸ்கள் அல்லது மைக்கோபாஜ்கள்
- T4 பாஜ்கள் (பாக்டீரியபாஜ்கள்) வால் நார்கள் எவ்வகை சாக்கரைடுகளை கொண்டுள்ளன? லிப்போ பாலி சாக்கரைடுகள்
- T4 பாஜ்கள் (பாக்டீரியபாஜ்கள்) பாக்டீரியாவுடன் (ஈ கோலை )ஏற்படுத்தும் ஒத்தேற்பு நிகழ்வுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ? பரப்பிரங்கல் (Landing)
- T4 பாஜ்கள் (பாக்டீரியபாஜ்கள்) வால் நார்கள், பாக்டீரியா (ஈ கோலை) செல்களின் மீது பொருத்தப்படுத்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? குத்துதல் (Pinning)
- பாக்டீரியத்தின் செல் சுவரை சிதைக்க வைரஸ் பயன்படுத்தும் நொதியின் பெயர் என்ன? லைசோசைம்
- பாக்டீரியாவினுள் வைரஸின் DNA துகள் தன்னிச்சையாக செலுத்தப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஊடுதொற்றல்
- ஓம்புயிரி செல்லின் (ஈ கோலை) குரோமோசோமுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பாக்டீரியபாஜ் DNA வை எவ்வாறு அழைக்கிறோம்? பாஜ் முன்னோடிகள்
- ஓம்புயிரி செல்லுக்கு வெளியே பெருக்கமடைய முடியாத ஒரு முழுமையான வைரஸ் எவ்வாறு அழைக்கப்படுகிறது? விரியான் (Virion)
- வைரஸில் உள்ள புரத உரை அற்ற தீங்களிக்கும் ஆர்.என் .ஏ எவ்வாறு அழைக்கப்படுகிறது ? வீராய்டு
- விராய்டுகளை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? T.O. டெய்னர் (1971)
- விராய்டுகள் (Viroids) சிட்ரஸ் பழங்களில் ஏற்படுத்தும் நோய் எது? சிட்ரஸ் எக்ஸோ கார்ட்டிஸ்
- விராய்டுகள் (Viroids)உருளைக்கிழங்கில் ஏற்படுத்தும் நோய் எது? கதிர் வடிவ கிழங்கு நோய்
- விருசாய்டுகள் (Virusoids) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? J.W. ராண்டல்ஸ் (1981)
- விருசாய்டுகள் எந்த வடிவ RNA க்களை பெற்றுள்ளது ? சிறிய வட்ட வடிவ RNA
- பிரியான்களை (Prions) கண்டுபிடித்தவர் யார்? B. புருச்னர்
- பிரியான்கள் விலங்குகளில் (மனிதன் உட்பட) ஏற்படுத்தும் நோய் எது? க்ரூயிட்ஸ் பெல்ட் - ஜேக்கப் நோய் (CJD)
- க்ரூயிட்ஸ் பெல்ட் - ஜேக்கப் நோய் (CJD) விலங்குகளின் எந்த பகுதியை தாக்குகிறது? மைய நரம்பு மண்டலம்
- பிரியான்கள் மாடுகளில் ஏற்படுத்தும் நோய் எது? பித்த நோய் (Mad cow disease) அல்லது போவைன் ஸ்பாஞ்சி பார்ம் என்செபலோபதி (BSE)
- பிரியான்கள் ஆடுகளில் ஏற்படுத்தும் நோய் எது? ஸ்கிராபி (Scrapie)
- வைரஸ்கள் புகையிலை, காலிப்ளவர், கரும்பு, வெள்ளரி, தக்காளி போன்ற தாவரங்களில் ஏற்படுத்தும் நோயின் பெயர் என்ன? தேமல் நோய்
- வைரஸ்கள் உருளைக்கிழங்கு மற்றும் பப்பாளியில் ஏற்படுத்தும் நோயின் பெயர் என்ன? இலைச்சுருள் நோய்
- வைரஸ்கள் வாழையில் ஏற்படுத்தும் நோயின் பெயர் என்ன? உச்சிக்கொத்து நோய்
- வைரஸ்கள் வெண்டையில் ஏற்படுத்தும் நோயின் பெயர் என்ன? நரம்பு வெளிர்தல் நோய்
- வைரஸ்கள் நெல்லில் ஏற்படுத்தும் நோயின் பெயர் என்ன? துங்ரோ நோய்
- ஹெப்பட்டைட்டிஸ் B எந்த நுண்ணுயிரியால் ஏற்படுகிறது ? வைரஸ்
- புற்றுநோய் எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ்
- சார்ஸ் என்ற அதி தீவிர சுவாசக் குறைபாடு நோய் எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ்
- எய்ட்ஸ் எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ்
- வெறிநாய்க் கடி எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ்
- பொன்னுக்குவீங்கி எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ்
- இளம்பிள்ளைவாதம் எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ்
- சிக்கின்குனியா எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ்
- பெரியம்மை என்ற நோய் எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ்
- சின்னம்மை என்ற நோய் எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது ? வைரஸ்
- தட்டம்மை என்ற நோய் எந்த நுண்ணுயிரியல் ஏற்படுகிறது? வைரஸ்
- கால்நடைகளில் கோமாரி நோய்க்கு காரணமான நுண்ணுயிரி எது ? வைரஸ்
- குதிரைகளில் மூளை தண்டுவட அழற்சி நோய்க்கு காரணமான நுண்ணுயிரி எது ? வைரஸ்
- எந்த குழுமத்தைச் சார்ந்த வைரஸ்கள் பூச்சிக்கொல்லிகளாக பயன்படுகிறது ? பேக்குலோவிரிடே
- பூச்சிக்கொல்லிகளாக பயன்படும் வைரஸ்களுக்கு உதாரணம் தருக? பாலிஹெட்ரோசிஸ் கிரானுலோ வைரஸ் மற்றும் எண்டமோ பாக்ஸ் வைரஸ்கள்
- தாவரவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? தியோ பிராஸ்டஸ்
- தாவரங்களை புற அமைப்புப் பண்புகள் (புதர்ச்செடி, சிறுச்செடி) அடிப்படையில் வகைப்படுத்தியவர் யார்? தியோ பிராஸ்டஸ்
- விலங்கினங்களை இரத்த நிறத்தின் (Enaima, Anaima) அடிப்படையில் வகைப்படுத்தியவர் யார்? அரிஸ்டாட்டில்
- உயிரின உலகத்தை தாவரங்கள், விலங்குகள் என (புறப்பண்புகளின் அடிப்படையில்) இரு குழுக்களாகப் பிரித்தவர் யார்? கார்ல் லின்னேயஸ்
- உயிரின உலகத்தை 3 பிரிவுகளாகப் (புரோட்டிஸ்டா, பிளாண்டே, அனிமேலியா) பிரித்தவர் யார்? எர்னெஸ்ட் ஹெக்கேல்
- உயிரின உலகத்தை 4 பிரிவுகளாகப் (மொனீரா, புரோட்டிஸ்டா, பிளாண்டே, அனிமேலியா) பிரித்தவர் யார்? கோப்லேண்ட்
- உயிரின உலகத்தை 35பிரிவுகளாகப் (மொனீரா, புரோட்டிஸ்டா, பூஞ்சைகள், பிளாண்டே, அனிமேலியா) பிரித்தவர் யார்? R.H. விட்டாக்கெர்
- R.H. விட்டாக்கெர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அமெரிக்கா
- எந்தப்பிரிவைச் சார்ந்த உயிரிகள் தொல்லுட்கரு உயிரிகள் (Prokaryotic) என அழைக்கப்படுகிறது? மொனீரா
- மொனிரா பிரிவு உயிரினங்களின் செல் சுவர் எதனால் ஆனது? பெப்டிடோ கிளைக்கான், மியூகோபெப்டைட்
- அடினோ வைரஸ்கள் எந்த அளவுக்கு கொண்டது ? 70-90 நானோ மீட்டர் விட்டம்
- இன்புளுயன்சா வைரஸ் எந்த அளவுக் கொண்டது? 80-200 நானோ மீட்டர்
- புகையிலை மொசைக் வைரஸ் எந்த அளவுக் கொண்டது? 18 x 250 நானோ மீட்டர் அல்லது 20 x 300 நானோ மீட்டர்
- வெறி நாயக் கடி எந்த நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது? வைரஸ்
- கோமாரி நோய் எந்த உயிரினங்களுக்கு ஏற்படுகிறது? கால்நடைகள்
- புகையிலை மொசைக் வைரஸ் எந்த வடிவம் கொண்டது? கோல் வடிவம்
- புகையிலை மொசைக் வைரஸ்களின் புரத உறை எந்த புரத துணை அலகுகளால் ஆனது? கேப்சோமியர்கள்
Pages
▼
No comments:
Post a Comment