Pages

▼

Wednesday, 17 February 2021

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு "சுவர் சித்திர போட்டிகள்"

இன்று தென்காசி,  அனைவருக்கும் கல்வித் திட்டம்,  தென்காசி வட்டார வளமையத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு சுவர் சித்திர போட்டிகள் நடந்தன.

தென்காசி ஒன்றியத்தில் உள்ள கரிசல்குடியிருப்பு,  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டு பள்ளிச் சுவற்றில் ஓவியங்கள் வரைந்தனர் 

தொடர்ந்து பள்ளி செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு இது  ஒரு புது வித அனுபவமாகவும்,  மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமைந்தது 

பாடப்புத்தகங்களில் உள்ள படங்களை நோட்டுகளில் பென்சில் துணையுடன் வரைந்து  பழக்கப்பட்ட மாணவர்களுக்கு பெயிண்ட், ப்ரெஷ் துணையுடன் சுவற்றில் நேரடியாக வரைந்தது மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது.

கொரோனா பாதுகாப்புடன் மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர் 

தென்காசி வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு. முத்துகிருஷ்ணன் ஆசிரியர் பயிற்றுனர் திரு. ஜெயராஜ் போட்டியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.

பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. தனலெட்சுமி மற்றும் ஆசிரியர்கள் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்  

















No comments:

Post a Comment