Pages

Saturday, 12 April 2025

NMMS 2025 Results Analysis ஒட்டு மொத்தமாக தட்டித் தூக்கிய தென் மாவட்டங்கள்

NMMS 2025 Relsults Analysis



ஒட்டு மொத்தமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை மாவட்டங்கள் முதல் 8 இடங்களை தட்டித் தூக்கி உள்ளார்கள்




கடந்த ஆண்டு பின் தங்கிய நிலையில் இருந்த தென்காசி மாவட்டம் முழு தேர்ச்சியை விட அதிகம் பெற்று 6 வது இடத்தை பெற்றுள்ளது






இந்த தேர்வு எழுத 2,30,345 விண்ணப்பித்தனர்.





மாநிலத்தில் தேர்வு செய்யப்படும் மொத்த மாணவர்கள் = 6,695




Gen category தேர்வு செய்யப்படுபவர்கள் = 1992 பேர்


(190 லிருந்து 108 மதிப்பெண்கள் பெற்றவர்கள் Gen category இல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்)





OBC category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 1173 பேர்

(108 - 97 மதிப்பெண்கள்)





BCM category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 234 பேர்

(108 - 97 மதிப்பெண்கள்)





MBC category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 1338 பேர்

(108 - 96 மதிப்பெண்கள்)






SC category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 995 பேர்

(108 - 92 மதிப்பெண்கள்)






SCA category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 198 பேர்

(108 - 90 மதிப்பெண்கள்)





ST category இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 64 பேர்

(108 - 92 மதிப்பெண்கள்)





PWD category(Blind) இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 16 பேர்

(110 - 63 மதிப்பெண்கள்)






PWD category(DEAF) இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 6 பேர்

(72 - 59 மதிப்பெண்கள்)





PWD category(ORTHO) இல் தேர்வு செய்யப்படுபவர்கள் 57 பேர்

(130 - 72 மதிப்பெண்கள்)




Gen Ortho 1 மாணவர்




OBC Ortho 1 மாணவர்




MBC Ortho 1 மாணவர்




SC Ortho 19 மாணவர்கள் (72-58)




ST ortho 3மாணவர்கள்

(71-60)




ஆக மொத்தம் 6,695 மாணவர்கள் மேற்காண் பட்டியலின் படி அரசின் ஊக்கத்தொகை பெற தகுதியானவர்கள்.


சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த வருடம் cut off மதிப்பெண்கள் கணிசமாக உயர்ந்துள்ளது




வெற்றி அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்


நன்றி

Mani Mathboard

Sunday, 6 April 2025

2025-2026 NMMS சமூக அறிவியல் ஆன்லைன் மாதிரித்தேர்வு 3 PREPARED BY ELA.BABUVELAN, TENKASI

2025-2026 NMMS 

சமூக அறிவியல் 

மாதிரித்தேர்வு 3 




7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

முதல் பருவம் 

"தென்னிந்திய புதிய அரசுகள்" 

PART - 1

"பிற்காலச்சோழர்கள்"




கடந்த கல்வி ஆண்டை போல் இந்த ஆண்டிலும் (2025-2026) NMMS மாதிரித் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது 




இந்த தேர்வானது தற்போது 7 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு 7 வகுப்பு பாடங்களிலேயே  பயிற்சி அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது 




இப்போது தொடங்கி பயிற்சி எடுக்கும் போது 7 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த கல்வி ஆண்டிலேயே தங்கள் பாடங்களை ஓரளவு REVISION செய்ய இது ஒரு வாய்ப்பாக அமையும் 



இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களில் இருந்து நடைபெறும்  



ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தில் இருந்து மட்டுமே தேர்வுக்கான வினாக்கள் கேட்கப்படும் 




இந்த தேர்வானது முதல் நாள் ஆன்லைன் தேர்வாக வழங்கப்படும். மறுநாள் இதே லிங்கில் தேர்வுக்கான PDF வினா விடை வழங்கப்படும் 



இந்த தேர்வானது குறிப்பிட்ட நாள் இடைவெளியில் தொடர்ந்து நடைபெறும். அடுத்த தேர்வுக்கான தேதி கீழே வழங்கப்பட்டுள்ளது.




தேர்வு குறித்த சந்தேகங்கள் 9952329008 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளவும் 




நன்றி 

இள . பாபு வேலன் 

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல் ) 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

கரிசல்குடியிருப்பு 

தென்காசி (ஒன்றியம் ) 

தென்காசி மாவட்டம் 



NMMS சமூக அறிவியல் ஆன்லைன் மாதிரி தேர்வு 3

👇

CLICK HERE TO WRITE ONLINE EXAM






தொடர்ந்து NMMS ஆன்லைன் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும் 

👇

CLICK HERE TO JOIN




ramanibabu.blogspot.com வலைதளத்தில் வரும் புதிய செய்திகளை உடனே தெரிந்துகொள்ள view web version என்ற பகுதியில் click செய்து வலைதளத்தின் முழு வடிவத்தை பார்க்கவும் அதன் வலதுபுறம் உள்ள follow என்ற பகுதியை கிளிக் செய்து follow செய்துகொள்ளவும் 



அடுத்த தேர்வு 

7 ஆம் வகுப்பு 

முதல் பருவம் 

சமூக அறிவியல் 

"தென் இந்தியப் புதிய அரசுகள் PART - 2

"பிற்காலப் பாண்டியர்கள்"



நாள்: 07.04.2025

நேரம் : 7 pm  

Saturday, 5 April 2025

தென்காசி மாவட்டம் தென்காசி வட்டாரத்தில் பிரமாண்டமாக நடந்த வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் பணி நிறைவு விழா

 



தென்காசி மாவட்டத்தில் தென்காசி ஒன்றியத்தில் பணி நிறைவு பெறும் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.இளமுருகு மற்றும் பணி நிறைவு பெறும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பணி நிறைவு பாராட்டு விழா மிக பிரமாண்டமாக இன்று நடந்தது




விழாவிற்கு தென்காசி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள் தலைமை தாங்கினார்கள்


தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் திரு.சண்முகசுந்தரப்பாண்டியன், 

தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் திரு.இளமுருகு அவர்கள், 

தென்காசி வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் 


தலைமை ஆசிரியர் திருமதி கற்பகம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்


திரு.கமால் முகைதீன்

திரு.போஸ்கோ குணசீலன்

திரு.A.B.ஜான்கென்னடி

திரு.அ.பி. சரவணன்

திருமதி.தனலெட்சுமி

திருமதி . ஷெராபின்

திருமதி . பாத்திமா ஹுசைன்  

திரு.வின்சென்ட்

ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்


விழாவில் பணி நிறைவு பெறும் தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர் திரு.இளமுருகு, 

பணி நிறைவு பெறும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்


திரு.யாசீன் முகைதீன்


திரு.முகமது இஸ்மாயில்


திருமதி.பாத்திமா யாஷ்மின்


திரு.தங்கத்துரை


திருமதி.ஹெப்சிபா


திருமதி.முகமது பாத்திமா


திரு.பெரியசாமி


திருமதி.மோட்சமேரி


திருமதி.அமுதா ரெங்கநாயகி


திரு.செபஸ்தியான்


திரு.மாரிராஜன்


ஆகியோர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது


விழாவை தலைமை ஆசிரியர் திரு.இராஜதுரை ஒருங்கிணைத்தார்கள்


ஏற்புரை ஆற்றிய வட்டாரக் கல்வி அலுவலர் திரு.இளமுருகு அவர்கள் தான் ஆசிரியராக பணியாற்றிய காலம் தொட்டு வட்டாரக் கல்வி அலுவலர் பணி வரையிலான அனுபவங்களை நினைவு கூர்ந்து விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஆசிரியர்களிடத்தில் நன்றியை தெரிவித்துக் கொண்டார்


விழாவில் இன்று விடுமுறையிலும் தென்காசி ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


பணி நிறைவு பெறும் ஆசிரியர்களின் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் பாராட்டி பேசினார்கள்.


ஒன்றியத்தின் மூத்த ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறும் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்கள்


தலைமை ஆசிரியர் திருமதி சுப்புலெட்சுமி அவர்கள் நன்றியுரை வழங்கினார்























Thursday, 3 April 2025

திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் தேர்வு தேதி மாற்றம்

 

திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 07.04.2025 நடைபெறுவதாக இருந்த தேர்வு 08.04.2025 அன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியானது